தாய்மார், சிறார் நலனுக்காக புதிய ஆய்வுக் கழகம்

2 mins read
88faa40e-46dd-4635-acde-cf4b121a804c
-

சிங்­கப்­பூ­ரில் தாய்­மார், சிறார் சுகா­தார மேம்­பாட்­டில் கவ­னம் செலுத்­து­வ­தற்­காக புதிய ஆய்­வுக் கழ­கம் ஒன்று திறந்­துள்­ளது. நோயா­ளி பரா­ம­ரிப்­பு­டன் பெண்­கள் மற்­றும் சிறார்­கள் தொடர்­பான முக்­கிய விவ­காரங்­க­ளைக் கையாள்­வ­தற்­குப் புத்­தாக்க, மின்­னி­லக்­கத் தீர்­வு­கள் குறித்து ஆய்­வுக் கழ­கம் ஆரா­யும்.

இனப்­பெ­ருக்­கம், வளர்­சிதை மாற்­றம், மன­ந­லன், அறி­வாற்­றல் வளர்ச்சி, புற்­று­நோய் மற்­றும் முக்­கி­ய­மான நோய்­க­ளைக் குணப்­ப­டுத்­து­வது போன்ற அம்­சங்­கள் தொடர்­பில் தீர்­வு­கள் காண்­ப­தைக் கழ­கம் தன் இலக்­கா­கக் கொண்­டுள்­ளது.

இதற்­காக சிங்­ஹெல்த் டியூக் - என்­யு­எ­சின் 'தாய்­மார், சிறார் சுகா­தார ஆய்­வுக் கழ­கம் (எம்­சி­எச்­ஆர்ஐ), கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யின் நிபு­ணத்­து­வத்தை நாட­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. பல ஆய்­வாளர்­களை வரி­சை­யாக உரு­வாக்­கு­வ­து­டன் முக்­கிய கூட்­ட­ணி­களை ஏற்­ப­டுத்­திக் கொள்­ள­வும் ஆய்­வுக் கழ­கம் முனைந்­தி­டும்.

ஆய்­வுக் கழ­கத்­தின் தொடக்க விழா கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யில் நேற்று நடை­பெற்­றது. சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி அதில் கலந்­து­கொண்­டார்.

உள்­ளூர் ஆராய்ச்­சித் தக­வல்­களைத் தாக்­கம் மிகுந்த குறுக்­கீட்­டுத் திட்­டங்­க­ளாக மாற்­று­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை அவர் சுட்­டி­னார்.

"தாய்-பிள்ளை இணைக்கு ஒட்டு­மொத்த ஆத­ரவு வழங்­கு­வ­தற்­காக ஓர் ஒருங்­கி­ணைந்த சூழல் அமைப்பை எம்­சி­எச்­ஆர்்ஐ வலுப்­படுத்தி உரு­வாக்­கித் தர­லாம்.

"ஆய்­வா­ளர்­கள், கல்­வி­யா­ளர்­கள், பயிற்­சி­யா­ளர்­கள், சேவை வழங்­கு­நர்­கள் ஆகி­யோ­ரைக் கொண்ட ஒன்­று­பட்ட சமூ­கத்தை உரு­வாக்­கும் பணியை மேற்­கொள்­ளும் தகு­தியை எம்­சி­எச்­ஆர்ஐ பெற்­றுள்­ளது. இத­னால் ஆய்­வில் கண்­டறிந்­த­தைத் தாய், பிள்ளை ஆகி­யோ­ருக்­காக நேர­டி­யாக நடை­முறைப்­ப­டுத்த முடி­யும்," என்­றார் திரு மச­கோஸ்.

ஒரு தேச­மாக மனி­த­னின் ஆற்­றலை அதி­கப்­ப­டுத்­த­வும் மேலும் மீள்­தி­றன் மிக்க ஒரு சமூ­கத்தை உரு­வாக்­க­வும் ஆய்­வுக் கழ­கம் கைகொ­டுக்­கும் என்­றார் கழ­கத்­தின் இயக்­கு­நர் இணைப் பேரா­சி­ரி­யர் இங் கீ சோங். இத்­தா­லி­யின் 'மெனா­ரினி பயோ­மார்க்­கஸ் சிங்­கப்­பூர்' (எம்­பி­எஸ்) பிரிவு, எம்­சி­எச்­ஆர்ஐ கூட்­ட­ணி­யில் ஆசிய மையம் ஒன்­றும் அமைக்­கப்­ப­டும். சுகா­தாரப் பரா­ம­ரிப்­புத் துறையின் உயிர்­தொழில்­நுட்­பம், பரி­சோ­தனை அம்­சங்­கள் தொடர்­பில் ஆய்வு மற்­றும் மேம்­பாட்டு வளர்ச்சியில் இம்மையம் கவ­னம் செலுத்­தும்.