உள்ளூர் சுற்றுப்பயணிகளாக மாறத் தயங்காத சிங்கப்பூரர்கள்

வெளி­நாட்­டுப் பய­ணம் மேற்­கொள்­ளும் சாத்­தி­யம், பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இல்­லாத கார­ணத்­தால் உள்­ளூ­ரி­லேயே சுற்­றுப்­ப­ய­ணி­யாக மாறத் தயா­ரா­கி­விட்­ட­னர்.

உள்­ளூர் சுற்­று­லாக்­க­ளுக்­கான முன்­ப­திவு, ஆண்­டின் முற்­பா­தி­யில் இரட்டை இலக்­கத்­தில் வளர்ச்சி கண்­டது. கொவிட்-19க்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் கடு­மை­யாக்­கப்­பட்ட உயர் எச்­ச­ரிக்கை கால­கட்­டத்­துக்கு முன்­ன­தாக ஏப்­ரல் மாதத்­தில் உள்­ளூர் சுற்­று­லாக்­க­ளுக்­கான முன்­ப­திவு எண்­ணிக்கை 54,200. மார்ச் மாதத்­தில் இருந்த 35,200 முன்­ப­தி­வு­க­ளைக் காட்­டி­லும் இது 54% அதி­க­மா­கும்.

சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் தர­வு­க­ளின்­படி, ஜன­வரி மாதத்­தில் 17,100 முன்­ப­தி­வு­களும் பிப்­ர­வரி மாதத்­தில் 22,700 முன்­பதி­வு­களும் உள்­ளூர் சுற்­று­லாக்­களுக்­குச் செய்­யப்­பட்­டன. ஏறு­மு­க­மா­கவே அடுத்­த­டுத்து மார்ச், ஏப்­ரல் மாதங்­க­ளி­லும் முன்­ப­திவு எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருந்­தது.

கடந்த ஆண்டு பள்ளி விடு­மு­றைக் கால­மான டிசம்­பர் மாதத்­தில் 48,600 முன்­ப­தி­வு­கள் செய்­யப்­பட்­டன. இது நவம்­பர் மாதத்­தைக் காட்­டி­லும் 350% அதி­க­மா­கும். நவம்­பர் மாதத்­தில்­தான் சிங்­கப்­பூரை மீண்­டும் ரசிப்­ப­தற்­கான சுற்­றுலா பற்­றுச்­சீட்­டுத் (எஸ்­ஆர்வி) திட்­டம் அறி­விக்­கப்­பட்­டது. $100 பெறு­மா­ன­முள்ள பற்­றுச்­சீட்­டு­கள், 18 வய­தும் அதற்கு மேற்­பட்ட வய­தும் உடைய அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் வழங்­கப்­பட்­டன. உள்­ளூர் ஹோட்­டல்­களில் தங்­கு­வது, சுற்­றுப்­ப­ய­ணத் தலங்­க­ளுக்­கான நுழை­வுச்­சீட்­டு­களை வாங்­கு­வது, உள்­ளூர் சுற்­று­லாக்­கள் மேற்­கொள்­வது போன்­ற­வற்­றுக்­காக பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம் என்று கூறப்­பட்­டது. இது உள்­ளூர் சுற்­றுப்­ப­ய­ணங்­களை ஊக்­கு­விக்­கும் பொருட்டு அமைந்த ஒரு திட்­டம்.

'எஸ்­ஆர்வி' திட்­டத்­தால் சுற்­று­லாக்­க­ளின் தேவை அதி­க­ரித்­துள்ள அதே வேளை­யில், உள்­ளூர்­வா­சி­களின் ரச­னைக்கு ஏற்ப புத்­தாக்க அணு­கு­மு­றை­க­ளைக் கையா­ளும் சுற்­றுலா நிறு­வ­னங்­க­ளின் முயற்­சி­களும் வீண்­போ­க­வில்லை.

சாலை­யி­லும் நீரி­லும் செல்­லக்­கூ­டிய படகு வாக­னங்­க­ளைக் கொண்ட 'பிக் பஸ் & டக்­டு­வர்ஸ்' நிறு­வ­னம், அதன் அணு­கு­மு­றையை மாற்ற வேண்­டி­யி­ருந்­த­தா­கத் தெரி­வித்­தது. ஒரு மணி­நே­ரத்­திற்கு சிங்­கப்­பூ­ரின் வெவ்­வேறு இடங்­களை உள்­ளூர்­வா­சி­கள் கண்டு ரசிக்­கும் வகை­யில் அதன் சுற்­று­லாவை மாற்றி அமைத்­த­தாக நிறு­வனம் குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!