செய்திக்கொத்து

2 mins read
7bebbb42-4eea-4584-a110-093acad3174e
-

கிம் மோ தீ; தடைக்காப்பில் இருந்தோர் வெளியேற்றம்

புளோக் 13 கிம் மோ ரோட்டில் ஒரு வீட்டில் தீப் பிடித்ததை அடுத்து தடைக்காப்பு உத்தரவில் இருந்த குடும்பத்தினர் ஆறு பேர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கல்வியாளரான 40 வயது திரு அஃப்ரட் ஓட்டம் பிடிப்பதா மூச்சுத் திணறியபடி வீட்டில் காத்திருப்பதா என்ற முடிவெடுக்க வேண்டி இருந்தது. திரு அஃப்ரட்டும் தமது மனைவி, மூன்று பிள்ளைகள், மாமியார் அனைவரும் மின்தூக்கியில் ஏறி கீழ்த்தளத்தை அடைந்தனர். பின்னர், குழுமி இருந்த அண்டைவீட்டார் அனைவரையும் நோக்கி ஓடினார்கள்.

கிட்டத்தட்ட 80 பேர் அந்தக் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

36, 81 வயதான இரண்டு பெண்கள் புகையைச் சுவாசித்ததால் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தென்கொரிய நிரந்தரவாசிக்கு சிறைத் தண்டனை

டிரம்ப்-கிம் சந்திப்பில் (2018) சிங்கப்பூர்க் காவல் துறைக்கு மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்த தென் கொரியர் கிம் ஜூ ஹியுங் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் பெண்கள் கழிப்பறையைப் பயன்படுத்துவதைக் காணொளியாக எடுத்ததற்காகப் பிடிப்பட்டார்.

போலிஸ் படையின் தயார்நிலை தேசிய சேவையாளரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான கிம்மிற்கு அக்டோபர் நான்காம் தேதி, திங்கள் அன்று 22 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கிம் மீதான மேலும் 24 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

கேமரா ஒன்றை கிம், ஊசி துளை (பின் ஹோல்) ரகசியமாக ஒரு கழிப்பறையில் பிப்ரவரி 23ஆம் தேதி பொருத்தினார். அதில் பதிவான காட்சிகள் கிம்மின் கைபேசியில் பதிவு செய்யப்பட்டன.

பொய்ச் செய்திக்கு பொஃப்மா ஆணை பிறப்பிக்கப்பட்டது

உள்துறை அமைச்சு சிங்கப்பூரின் பொய்ச் செய்தி சட்டத்தின் கீழ் ஆர்வாளர் ஜோலோவான் வாம் மீது அவரது டுவிட்டர் பதிவீடு குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஜோலோவான் வாம் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் பேசியதைத் தவறாகப் பிரதிநிதித்ததற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திரு வேமிற்குத் திருத்தத்திற்கான உத்தரவைப் பிறப்பிக்கும்படி அமைச்சு இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டம் தொடர்பான அலுவலகத்திடம் (பொஃப்மா) கேட்டுக்கொண்டுள்ளது.

அக்டோபர் ஆறாம் தேதி டுவிட்டரில் பதிவிடப்பட்ட அந்தச் செய்தி பொய்யான கருத்தைத் தெரிவிப்பதாக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. திரு வாம் பதிவின் திருத்தத்தைக் குறித்து தமது இணையத்தளத்தில் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்தது.