வேலையிட மரணங்களுக்கு விபத்துகளே முக்கிய காரணம்

வேலை இடத்­தில் நிக­ழும் மர­ணங்­க­ளுக்கு வாகன விபத்­து­களே முதல் கார­ணம் என்று தெரிய வந்­துள்­ளது. மனிதவள அமைச்சு வேலையிடப் பாது­காப்பு குறித்து நேற்று வெளி­யிட்ட அரை­யாண்டு புள்ளி விவ­ரங்­களில் இந்தத் தக­வல் வெளி­யி­டப்­பட்­டது.

ஜன­வ­ரிக்­கும் ஜூனுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் 23 ஊழி­யர்­கள் பணி­பு­ரிந்­து­கொண்­டி­ருந்­த­போது உயி­ரி­ழந்­துள்­ள­னர். அவற்­றுள் ஆறு சம்­ப­வங்­கள் வாகன விபத்­துகள்.

உயி­ரி­ழந்­தோ­ரில் நால்­வர் விநி­யோக ஊழி­யர்­கள். இவர்­க­ளுள் மூவர் மற்ற ஓட்­டு­நர்­க­ளின் கவ­னக் குறை­வால் மாண்­ட­னர்.

இத்தகைய மரணங்களைக் குறைக்கும் நோக்கத்தில், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றம், தேசிய விநியோக தன்னுரிமை தொழிலாளர்கள் சங்கம், கிராப், சிங்போஸ்ட் போன்ற நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பணிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

வாகன விபத்து எச்­ச­ரிக்கை முறை, இரு சக்­கர வண்டி ஓட்­டு­நர் கண்­கா­ணிப்பு முறை, போன்ற வளர்ந்து வரும் தொழில்­நுட்ப தீர்வு­கள் முன்­னோ­டித் திட்­ட­மாக விநி­யோக நிறு­வ­னங்­க­ளி­டையே தொடங்­கப்­படும் என்று மனிதவள அமைச்சு தெரி­வித்­தது.

இரண்டு மாதக் காலத்­துக்கு வாகன பாது­காப்பு பற்­றிய அம­லாக்க நட­வ­டிக்கை இம்­மா­தத்­தி­லி­ருந்து நடத்­தப்­படும்.

இவை, போக்­கு­வ­ரத்துச் சேவைச் துறை, சரக்கு சேமிப்புத் துறை, கட்­டு­மா­னத்­துறை உற்­பத்­தித்­துறை போன்ற போக்­கு­வ­ரத்து ஆபத்து அதிகம் கொண்ட துறை­க­ளைக் குறி வைக்­கும்.

இவ்­வாண்­டின் முதற்­ப­கு­தி­யில் நிகழ்ந்த வேலை­யிட மர­ணங்­களில் 60% போக்­கு­வ­ரத்துச் சேவைத் துறை­யை­யும் கட்­டு­மா­னத்­து­றை­யை­யும் சேர்ந்­தவை.

துவாஸ் வெடிப்­பில் மாண்ட மூவ­ரை­யும் சேர்த்து உற்­பத்­தித் துறை­யில் நான்கு மர­ணங்­கள் ஏற்­பட்­டுள்­ளன. இவ்­வாண்டு இது­வரை குறைந்­தது 30 பேரா­வது வேலை இடத்­தில் மாண்­டுள்­ள­னர். மனித வள அமைச்சு உற்­பத்­தித்­து­றை­யைக் கூர்ந்து கவ­னித்து வரு­வ­தாகத் தெரி­வித்­துள்­ளது. உயிர் சேதம் ஏற்­ப­டாத விபத்­து­களில் அதி­க­மா­னவை இத்­து­றை­யி­லேயே நிகழ்ந்­துள்­ளன. வேலை இடத்­தில் காயம் ஏற்­ப­டுத்­திய சம்­ப­வங்­கள் இவ்­வாண்­டின் முதற்­ப­கு­தி­யில் மட்­டும் 6,411 நிகழ்ந்­துள்­ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!