சட்டவிரோத இறக்குமதி; $30,000 அபராதம்

1 mins read
523e4be9-e883-43ac-b5af-414af8b2ed14
-

கொரிய உணவு இறக்குமதியாளர் ஒருவருக்கு நேற்று நீதிமன்றத்தில் $30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

உரிமம் இல்லாத குளிர்பதன அறை ஒன்றை இயக்கியதற்கும் சட்ட விரோதமாகக் கடல் உணவுகளைத் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்ததற்கும் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

'கோர்யோ டிரேடிங்ஸ்'சில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது கிட்டத்தட்ட 4,600 கிலோ இறைச்சியும் கடல் உணவும் உரிமம் இல்லாத குளிர்பதன அறையில் காணப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.