‘பிஎம்டி’ தீச்சம்பவத்தில் ஆடவர் ஒருவர் மரணம்

ஜூரோங் வெஸ்ட்­டில் உள்ள வீட­மைப்பு வளர்ச்சி கழக வீட்­டின் படுக்கை அறை ஒன்­றில் தீ பிடித்­ததை ஆடுத்து ஆட­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார் என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை நேற்று தெரி­வித்­தது.

முதல் கட்ட விசா­ர­ணை­யில் தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னத்­தி­லி­ருந்து (பிஎம்டி) தீ மூண்­ட­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

ஜூரோங் வெஸ்ட் புளோக் 978ல் ஐந்­தாம் மாடி­யில் ஏற்­பட்ட தீச் சம்­ப­வம் குறித்த தக­வல் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்கு நேற்று அதி­காலை 2.25 மணிக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது.

அவ்­வீட்­டின் வெளிப்­பு­றத்­தின் விளிம்­பில் இரு­வர் காணப்­பட்­ட­னர். தீய­ணைப்­பா­ளர்­கள் படுக்­கை­ய­றைக்கு­ள் பல­வந்­த­மாக நுழைந்து அவர்­க­ளைக் காப்­பாற்­றி­னர். பக்­கத்து அறை­யில் மூண்ட தீ, நீர் பாய்ச்சி அணைக்­கப்­பட்­டது.

தீ பற்­றிய அறை­யில் 22 வயது ஆட­வர் ஒரு­வர் இறந்த நிலை­யில் காணப்பட்டார் என போலி­சார் தெரி­வித்­த­னர்.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அங்கு வரு­வ­தற்­குள் 24 வயது ஆட­வர் ஒரு­வர் அவ்­வீட்­டி­லி­ருந்து வெளி­யேற்­ற­ப்பட்டு, தீக் காயங்­க­ளு­டன் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டார் என்­றும் போலி­சார் தெரி­வித்­த­னர்.

மேலும், அக்­கம் பக்­கத்­தி­லி­ருந்த வீடு­க­ளி­லி­ருந்த கிட்­டத்­தட்ட 60 குடி­யி­ருப்­பா­ளர்­களை போலி­சார் வெளி­யேற்­றி­னர்.

துணை மருத்­துவ ஊழி­யர்­களின் சேவை இரண்டு தீய­ணைப்­பா­ளர்­க­ளுக்­குத் தேவைப்­பட்­ட­தா­க­வும் தெரிய வந்­துள்­ளது.

தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னங்­களை எவ்­வாறு பாது­காப்­பா­கக் கையா­ளு­வது என்­பது குறித்தும் இதுபோன்ற தீச்­சம்­ப­வங்­களை எவ்­வாறு தவிர்ப்­பது என்­பது குறித்­தும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் தக­வல்­க­ளைப் பதி­விட்­டுள்ளது.

யுஎல்2272 பிஎம்டி ரகம் அல்­லாத சாத­னங்­கள், தீப் பற்றக்கூடியவை என்­றும் மறு­ப­ய­னீட்­டா­ளர்­க­ளி­டம் அவற்­றைக் கொடுத்து அப்­பு­றப்­ப­டுத்­து­மா­றும் அது கேட்­டுக்­கொண்­டது.

வெஸ்ட் கோஸ்ட் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான திரு ஆங் வெய் நெங் சம்­பவ இடத்­துக்கு நேற்று காலை சென்­றி­ருந்­த­தா­கத் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!