செல்லப்பிராணி விற்பனை செய்வோருக்கு ஏப்ரல் முதல் புதிய விதிமுறைகள்

செல்லப்பிராணி விற்பனை செய்வோருக்கு ஏப்ரல் முதல் புதிய விதிமுறைகள்

1 mins read
ba0c29fc-1343-4247-9bf0-2f2aefccb240
செல்­லப்­பி­ரா­ணி­க­ளுக்கு சமூ­கத்தொடர்பு, உடற்­பயிற்சி போன்­ற­வற்­றுக்­கான வாய்ப்­பு­களை செல்லப்பிராணி வளர்ப்பிடங்கள் ஏற்­ப­டுத்­தித்­த­ர வேண்டும் என்பதும் புதிய கட்டுப்பாடுகளில் ஒன்று. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

செல்­லப்­பி­ரா­ணி­கள் நலனை மேம்­ப­டுத்­தும் பொருட்டு செல்­லப்­பி­ராணி­களை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்வோ­ருக்­கான உரி­மம் பெறுவதில் பெரிய மாற்­றம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

வரும் ஏப்­ரல் முதல் தேதி­யில் இருந்து இந்­தப் புதிய மாற்­றம் நடை­மு­றைக்கு வரு­கிறது. அதன்­படி, செல்­லப்­பி­ரா­ணி­களை விற்­ப­தற்­காக வளர்ப்­போர், நாள்­தோ­றும் செல்­லப்­பி­ரா­ணி­கள் மற்­றும் அவற்றின் குட்­டி­கள் ஆகி­ய­வற்றின் உடல்­நி­லை­யைப் பரி­சோ­தனை செய்யவேண்­டும்.

அத்­து­டன் அவர்­கள் தாங்­கள் விற்பனைக்காக வளர்க்­கும் செல்லப்­பி­ரா­ணி­க­ளுக்குச் சமூ­கத் தொடர்பு, உடற்­பயிற்சி போன்­ற­வற்றுக்­கான வாய்ப்­பு­களை ஏற்­படுத்­தித்­த­ர­வேண்­டும். மேலும் தடுப்­பூசி, ஆண்டு சுகா­தா­ரப் பரி­சோ­த­னை­கள், சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்­ற­வற்­றுக்­கான சான்­று­க­ளைப் பரா­ம­ரிக்க வேண்­டும். இனப்­பெ­ருக்­கம் செய்­யும் நாய்­கள் ஆண்­டுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போட­வேண்­டும். அத்­து­டன் அவற்­றுக்கு ஆறு வய­தா­கும்­போது ஓய்­வு­பெற வேண்­டும். இனப்­பெ­ருக்­கம் செய்­யா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்­டும்.

நாய்­கள் அதன் ஓய்வு வயதை எட்­டும்­போது, அவை பிரா­ணி­கள் வளர்க்­கு­மி­டத்­தில் இருந்­தா­லும் வீடு­களில் எடுத்து வளர்க்­கப்­பட்­டா­லும் கண்­டிப்­பாக அவற்­றுக்கு கருத்­தடை செய்­தி­ருக்­க­வேண்­டும் என்று விலங்­கு­நல மருத்­து­வச் சேவை பிரிவு (ஏவி­எஸ்) தெரி­வித்­தது.