3-6 மாதங்களில் வாழ்க்கை புது வழமைக்கு மாறும் நிலை பிரதமர்: பலம், மீள்திறன் அன்றாடம் கூடுகிறது, கொரோனாவுடன் வாழத் தயாராகிறோம்

சிங்­கப்­பூ­ரில் இன்­னும் மூன்று முதல் ஆறுமாத காலத்­தில் புதிய வாழ்க்கை வழமை ஏற்­பட்­டு­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக பிரத­மர் லீ சியன் லூங் தெரி­வித்தார்.

இப்­போது அன்­றா­டம் தொற்று கூடி­வ­ரு­கிறது. இந்த நிலை­யில் கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் வெற்றி பெற முயலும் ஒரு கால­கட்­டத்­தில் சிங்கப்­பூர் நுழை­வ­தாக அவர் குறிப்பிட்டார்.

இந்­நி­லை­யில், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை தொடர்ந்து நெருக்­கு­தலில் இருந்து வரு­கிறது என்றும் டெல்டா கிருமி பர­வு­வது மெது­வ­டைந்து இருக்­கிறது என்­றா­லும் பர­வல் இன்­ன­மும் நிற்­க­வில்லை என்றும் திரு லீ கூறினார்.

ஒவ்­வொரு நாளும் சிங்­கப்­பூர் வலு­வ­டைந்து வரு­வ­தா­க­வும் அதனு­டைய மீள்­தி­றன் அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் கொரோனா கிரு­மி­யு­டன் வாழ்­வ­தற்கு நாடு ஆயத்­த­மாகி வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்ட பிர­த­மர், வாழ்­வில் இந்­தப் புதிய வழமை அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்­களில் ஏற்­பட்­டு­வி­டும் என்றார்.

கொவிட்-19 சூழ்நிலை பற்றி நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு லீ நேற்று உரையாற்றினார்.

கூடி­வ­ரும் தொற்று ஒரு கட்டத்தை எட்டி பிறகு குறை­யத் தொடங்­கும் என்­றும் இது ஒரு மாத காலத்­தில் இடம்­பெ­றும் என்று நம்­பப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­வித்த திரு லீ, இதன் விளை­வாக சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறைக்­கான சுமை குறை­யும்­போது கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­த­லாம் என்­றார்.

இருந்­தா­லும் புதிய தொற்று அலை ஏற்­ப­டு­வதைத் தவிர்த்­துக்­கொள்­ளும் வகை­யில் மிக­வும் கவ­ன­மா­கவே இதைச் செய்­ய­வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

தொற்­றில் இருந்து பாது­காப்­பாக மீண்டு வர­வேண்­டும் என்­றால் நாம் நம்­மு­டைய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை­யை­யும் ஊழி­யர்­களை­யும் என்ன விலை கொடுத்­தா­வது காப்­பாற்ற வேண்­டும் என்று திரு லீ வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­க­ளை­யும் அந்த முறையை­யும் பாது­காக்க அர­சாங்­கம் ஆன அனைத்­தை­யும் செய்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட திரு லீ, சிங்­கப்­பூரர்­க­ளின் சார்­பில் அவர்­களுக்கு நன்றி தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளைத் தாங்­களே தற்­காத்­துக்­கொண்டு மருத்­து­வ­ம­னை­க­ளை­யும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­க­ளை­யும் பாது­காக்க உதவ வேண்­டும் என்று பிரதமர் வலி­யு­றுத்­தி­னார்.

கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் ஒவ்­வொ­ரு­வ­ரின் ஒத்­து­ழைப்­பும் தேவை என்று வலி­யு­றுத்­திக் கூறிய பிரதமர் திரு லீ, கொரோனா கிருமித்தொற்றில் இருந்து விரை­வில் விடு­பட்­டு­விடு­வோம் என்­றும் நம்­பிக்­கை தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!