தடுப்பூசி போடாதோர்க்குத் தடை

இம்மாதம் 13ஆம் தேதியில் இருந்து உணவங்காடி நிலையங்களில் உண்ணவும் கடைத்தொகுதிகளுக்குள் நுழையவும் அனுமதியில்லை

கொவிட்-19க்கு தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் வரும் 13ஆம் தேதி புதன்­கி­ழ­மை­யில் இருந்து உண­வங்­காடி நிலை­யங்­கள் மற்­றும் காப்பிக்­கடை­களில் அமர்ந்து உணவு, பானம் அருந்­தவும் கடைத்­தொகுதி­கள் அல்­லது சுற்­று­லாத் தலங்­களுக்குச் செல்­லவும் அனு­மதி அளிக்­கப்­ப­டாது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ரைப் பாது­காக்­க­வும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அமைப்பு மீதான பளுவைக் குறைக்­க­வும் இந்த நட­வடிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கொரோனா தொற்­றி­யோ­ரில், குறிப்­பாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் உட்­பட குறிப்­பி­டத்­தக்க விகி­தத்­தி­னர் உண­வங்­காடி நிலை­யங்­கள், சில்­லறை விற்­பனை நிலை­யங்­கள், கடைத்­தொ­கு­தி­கள் போன்ற இடங்­க­ளுக்கு அடிக்­கடி சென்று வரும் இடங்­க­ளாக நோய்த்­தொற்­றி­யல் ஆய்­வு­கள் அடை­யாளம் கண்­டுள்­ள­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

தற்­போது, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் உண­வங்­காடி நிலை­யங்­கள் மற்­றும் காப்­பிக்­க­டை­களில் அமர்ந்து உண­வ­ருந்த முடி­யும். ஆனால், 13ஆம் தேதி முதல் அவர்­கள் உணவை வாங்கிச் செல்ல மட்­டுமே முடி­யும்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களில் அதி­க­பட்­சம் இரு­வர் உணவு, பான நிலை­யங்­களில் ஒன்­றாய்ச் சேர்ந்து உண­வு உண்ண அனு­ம­திக்­கப்­ப­டு­கிறது. 12 வய­திற்­குக் குறைந்த சிறார், கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து மீண்­டோர், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­போதும் நிகழ்ச்­சிக்கு முந்­திய பரி­சோ­த­னை­யில் 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்றோர் அந்த இரு­வ­ரில் இடம்­பெ­ற­லாம்.

இந்­நி­லை­யில், 13ஆம் தேதி­யி­ல் இ­ருந்து நடப்­பிற்கு வரும் புதிய விதி­மு­றை­க­ளின்­படி, இனி முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் மட்­டுமே உண­வங்­காடி நிலை­யங்­களில், காப்­பிக் கடை­களில் அமர்ந்து உண­வ­ருந்த முடி­யும் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

"மேற்­கண்ட தகு­தி­வி­தி­க­ளைப் பூர்த்தி செய்­யா­த­வர்­கள், உண­வங்­காடி நிலை­யங்­கள் அல்­லது காப்­பிக் கடை­களில் உணவு, பானம் வாங்­கிச் செல்­ல­லாம்," என்று அமைச்சு கூறி­யது.

பெரிய, தனித்து அமைந்­துள்ள பேரங்­கா­டி­க­ளுக்கு இவ்­விதி பொருந்­தாது என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!