அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலும் ஒன்பது நாடுகளுக்குச் சென்று வரலாம்

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயணத்தடத் திட்டம் விரிவாக்கம்

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் மேலும் ஒன்­பது நாடு­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யின்றி சென்று வர­லாம்.

கொவிட்-19 சூழ­லில் எல்­லை­களை மீண்­டும் திறந்­து­வி­டு­வ­தில் சிங்­கப்­பூர் முன்­னெ­டுத்­துள்ள மிகப்­பெ­ரிய நட­வ­டிக்கை இது.

இம்­மா­தம் 19ஆம் தேதி முதல், கனடா, டென்­மார்க், பிரான்ஸ், இத்­தாலி, நெதர்­லாந்து, ஸ்பெ­யின், பிரிட்­டன், அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்­குத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் சென்று வர­லாம்.

கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு செய்தி­யா­ளர்­க­ளை நேற்று சந்தித்­த­போது, போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் இந்த அறி­விப்பை வெளி­யிட்­டார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான இந்­தப் பய­ணத்­த­டத் திட்­டம் (விடி­எல்) நவம்­பர் 15 முதல் தென்­கொ­ரி­யா­விற்கு நீட்­டிக்­கப்­படும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்சு நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­தது.

உல­க­ளா­விய தொடர்­பு­டன் கூடிய அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்து மையம் என்ற சிங்­கப்­பூ­ரின் நிலையை மீட்­டெ­டுத்து, மீண்­டும் கட்­டி­யெ­ழுப்­பும் வித­மாக தடுப்­பூ­சிப் பய­ணத்­த­டத் திட்­டத்­தைக் கவ­னத்­து­ட­னும் படிப்­ப­டி­யா­க­வும் விரி­வு­ப­டுத்­தும் முடிவை எடுத்­த­தாக சிங்­கப்­பூர் பொது விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் ஓர் அறிக்கை வாயி­லா­கத் தெரி­வித்­தது.

ஜெர்­மனி, புருணை ஆகிய நாடு­க­ளு­டன் ஏற்­கெ­னவே இத்­திட்­டம் நடை­மு­றை­யில் இருந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

இரு பரிசோதனைகள் போதும்

'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் வெளி­நாட்­டுப் பய­ணி­கள் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­வ­தும் எளி­தாக்­கப்­படும்.

அத்­திட்­டத்­தின்­கீழ் இங்கு வரு­வோர் சிங்­கப்­பூ­ருக்­குக் கிளம்­பு­முன், இங்கு வந்­தி­றங்­கி­ய­தும் என இரு­முறை கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொண்­டால் போதும். இப்­போ­தைக்கு, வெளி­நாட்­டுப் பய­ணி­கள் நான்கு முறை கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

அதா­வது, சிங்­கப்­பூர் வந்­து­சேர்ந்த 3ஆம் நாளி­லும் 7ஆம் நாளி­லும் அவர்­கள் கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டி­ய­தில்லை.

குறு­கி­ய­கால விசா பய­ணி­களும் நீண்­ட­கால விசா வைத்­தி­ரு­ப்போ­ரும் சிங்­கப்­பூர் வர, 'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் தடுப்­பூ­சிப் பயண அனு­மதிக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும். அதே­வே­ளை­யில், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் 'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் பய­ணம் செய்ய இயல்பாகவே தகு­தி­பெ­று­வர். அவர்­கள் தடுப்­பூ­சிப் பயண அனு­மதிக்கு விண்­ணப்­பிக்­கத் தேவை இல்லை.

'விடி­எல்' திட்­டம் வழி­யாக தென்­கொ­ரி­யா­வில் இருந்து சிங்­கப்­பூர் வரத் திட்­ட­மி­டு­வோர் நவம்­பர் 8ஆம் தேதி காலை 10 மணி­யி­லி­ருந்து விண்­ணப்­பிக்­க­லாம்.

மற்ற எட்டு நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­களும் நாளை மறு­நாள் 12ஆம் தேதி காலை 10 மணி­யில் இருந்து விண்­ணப்­பிக்க முடி­யும். அந்­நா­டு­களைச் சேர்ந்­த­வர்­கள் இம்­மா­தம் 19ஆம் தேதி­யி­லி­ருந்து இங்கு வர­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!