சிங்கப்பூர்-மலேசிய எல்லைத் திறப்பு தொடர்பில் பேச்சு

2 mins read
fb9c2efe-f846-4746-9bfe-fd9fba9f3d89
-

தொடர்­பு­களை மீண்­டும் நிலை­நாட்ட வேண்­டும் என்ற பொது­வான விருப்­பத்தை சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் கொண்­டுள்­ளன என்­றும் எல்­லை­களை விரை­வில் திறப்­பது தொடர்­பில் உறு­தி­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­வது தொடங்­கும் என்­றும் நம்­பு­வ­தா­கச் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

எல்­லை­க­ளைத் திறப்­பது தொடர்­பில் இரு நாடு­க­ளுக்கும் இடையே தொடர்ந்து பேச்­சு­வார்த்தை நடந்து வரு­கிறது என்­றும் அதற்­கேற்ப சிங்­கப்­பூர் தனது எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தொடர்ந்து மாற்­றி­ய­மைக்­கும் என்­றும் நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங்­கும் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ர­னும் தெரி­வித்­த­னர்.

கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் நேற்­றைய மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது, ஜோகூர் உட­னான தனது எல்­லைக் கட்­டுப்­பா­டு­களை மறு­ஆய்வு செய்­வது பற்றி சிங்­கப்­பூர் பரி­சீலிக்­குமா என்று பெர்­னாமா செய்தி­யா­ளர் கேட்­ட­தற்கு, அமைச்­சர்­கள் இவ்­வாறு பதி­ல­ளித்­த­னர்.

கொவிட்-19 பர­வ­லின் அடிப்­படை­யில் நாடு­களை நான்கு பிரிவு­க­ளாக வகைப்­ப­டுத்­தி­யுள்ள சிங்­கப்­பூர், அதன் அடிப்­ப­டை­யில் வேறு­பட்ட எல்­லைக் கட்­டுப்­பாடு­களை­யும் வகுத்­துள்­ளது.

அதன்­படி, கொரோனா பர­வல் அபா­யம் மிக அதி­க­மாக உள்ள நாடுகளுக்கான நான்­காம் பிரி­வில் மலே­சியா இப்போது இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லை­யில், கொரோனா நில­வ­ரம், தடுப்­பூசி விகி­தத்­தைப் பொறுத்து இரு வாரங்­க­ளுக்கு ஒரு­முறை அப்­பட்­டி­யல் மறு­ஆய்வு செய்­யப்­ப­டு­வ­தாக அமைச்­சர் ஓங் குறிப்­பிட்­டார்.

"மலே­சி­யா­வில் நிலைமை மேம்­படும் பட்­சத்­தில், காலப்­போக்­கில், அந்­நாடு இடம்­பெற்­றுள்ள பிரி­வும் மாறும் என்­ப­தில் ஐய­மில்லை," என்­றார் அவர்.

கொரோனா தொற்று அபா­யத்­தைப் பொறுத்­த­மட்­டில், விமா­னப் போக்­கு­வ­ரத்­தி­லி­ருந்து தரை­வ­ழிப் போக்­கு­வ­ரத்து வேறு­பட்­டது எனக் குறிப்­பிட்ட அமைச்­சர் வோங், ஆகை­யால் அவற்­றைத் தனித்­தனி­யா­கவே பார்க்க வேண்­டும் என்று சொன்­னார்.

இப்­போது 100,000க்கும் மேற்­பட்ட மலே­சி­யர்­கள் தாய்­நாடு திரும்ப முடி­யா­மல் சிங்­கப்­பூ­ரில் தவித்­து­வ­ரு­வ­தாக மதிப்­பி­டப்­பட்டுள்­ளது.

இப்­போ­தைக்கு, கால­மு­றைப் பயண ஏற்­பாட்­டுத் (பிசிஏ) திட்­டத்­தின்­கீ­ழும் இறப்பு அல்­லது கடும் உடல்­ந­லக் குறை­பாடு போன்ற அவ­ச­ர­நி­லைக்­கா­க­வும் சிங்­கப்­பூர்-மலே­சியா இடையே பய­ணம் செய்ய முடி­யும்.