தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் வரும் 11 நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான விதிமுறைகள்

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர்க்­கான பய­ணத்­த­டத் திட்­டத்­தின்­கீழ் (விடி­எல்) வரும் 11 நாடு­க­ளுக்­குப் பய­ணம் செய்­வ­தற்­கான விதி­மு­றை­கள் இங்கே தரப்­பட்­டுள்­ளன.

தடுப்­பூசி கட்­டா­யம்

பய­ணி­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும். அவர்­கள் மின்­னி­லக்க முறை­யில் சரி­பார்க்­கத்­தக்க தடுப்­பூ­சிச் சான்­றி­தழ்­களை வைத்­தி­ருக்க வேண்­டும்.

இத்­திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூருக்கு வர, குறு­கி­ய­கா­லப் பயணி­களும் நீண்­ட­கால விசா வைத்­து இ­ருப்­போ­ரும் 'தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டவர்களுக்கான பயண அனு­மதி' பெற விண்­ணப்­பிக்க வேண்­டும்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் இந்­தப் பயண அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்க வேண்­டி­ய­தில்லை.

என்­றி­லி­ருந்து விண்­ணப்­பிக்­க­லாம்

தென்­கொ­ரியா தவிர்த்து, மற்ற எட்டு நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் சிங்­கப்­பூர் வர நாளை மறு­நாள் 12ஆம் தேதி செவ்­வாய்க்­கி­ழமை காலை 10 மணி­யி­லி­ருந்து விண்­ணப்­பிக்­க­லாம். 19ஆம் தேதி­யில் இருந்து அவர்­க­ளால் சிங்­கப்­பூர் வர இய­லும்.

தென்­கொ­ரி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் வர நவம்­பர் 8 காலை 10 மணி­யி­லி­ருந்து விண்­ணப்­பிக்­க­லாம். அங்­கி­ருந்து நவம்­பர் 15 முதல் இங்கு வர­லாம்.

கூடு­தல் விவ­ரங்­க­ளுக்கு https://safetravel.ica.gov.sg/ என்ற இணை­யத்­த­ளத்தை நாட­லாம்.

சிறார்க்கு அனு­ம­தி­யில்லை

'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் மட்­டுமே பய­ணம் செய்ய அனு­ம­திக்­கப்­ப­டு­வர். எனவே, 12 வய­துக்­குக்­கீழ் உள்ள சிறார் உட்­பட தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் இத்­திட்­டத்­தின்­கீழ் பய­ணம் செய்ய முடி­யாது. 'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் வராத விமா­னங்­களில் அவர்­கள் பய­ணம் செய்­ய­லாம். ஆனால், தனி­மைப்­படுத்­திக்­கொள்­ளும் விதி­களுக்கு அவர்­கள் உட்­ப­ட வேண்டும்.

கடைசி 14 நாள்கள்

இம்­மா­தம் 19ஆம் தேதி முதல், பயணி­கள் சிங்­கப்­பூ­ருக்­குப் புறப்­படு­முன் கடைசி 14 நாள்­களும் 'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் வரும் நாடு­களில் இருந்­தி­ருக்க வேண்­டும்.

பயணி ஒரு­வர் கடைசி 14 நாள்­களில் சிங்­கப்­பூ­ரில் இருந்­திருந்­தால், அவர் இங்கிருந்த நாள்­களும் அந்த 14 நாள்­கள் கணக்­கில் எடுத்­துக்­கொள்­ளப்­படும்.

கொவிட்-19 பரி­சோ­தனை

இம்­மா­தம் 19ஆம் தேதி முதல், 'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூர் வரும் பய­ணி­கள், சிங்­கப்­பூ­ருக்­குக் கிளம்­பு­வ­தற்கு 48 மணி நேரத்­திற்கு முன்­ன­ரும் இங்கு வந்­தி­றங்­கி­ய­வு­ட­னும் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

இங்கு வந்­தி­றங்­கி­ய­பின் 3ஆம், 7ஆம் நாளில் அவர்­கள் 'பிசி­ஆர்' பரி­சோ­தனை செய்­து­கொள்­ளத் தேவை­யில்லை.

பயண விமா­னங்­கள்

'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் இயக்­கப்­படும் விமா­னங்­களில் மட்­டுமே பய­ணம் செய்ய வேண்­டும். தென்­கொ­ரியா தவிர்த்த மற்ற எட்டு நாடு­களில் இருந்து இயக்­கப்­படும் விமா­னங்­கள் குறித்த கூடு­தல் விவ­ரங்­கள் விரை­வில் அறி­விக்­கப்­படும்.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் தனது 'விடி­எல்' சேவை­களை 14 நக­ரங்­களுக்கு விரி­வு­ப­டுத்­த­வுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

அது­போல், 'ஸ்கூட்' நிறு­வ­ன­மும் வரும் 20ஆம் தேதி­யில் இருந்து சிங்­கப்­பூர்-பெர்­லின் இடையே வாரம் மும்முறை விமானங்களை இயக்க இருக்­கிறது.

இதர விதி­மு­றை­கள்

குறு­கி­ய­கா­லப் பய­ணி­கள் சிங்­கப்­பூர் வர தனி­யாக விசா பெற வேண்­டும். சிங்­கப்­பூ­ர் வர அனு­மதி பெற்ற பிற­கும் சிங்­கப்­பூ­ருக்­குப் புறப்­ப­டு­வதற்கு முன்­பும் விசா பெறும்படி அவர்­கள் அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றனர். சிங்­கப்­பூ­ருக்கு வரு­முன், கொவிட்-19 சார்ந்த மருத்­துவ சிகிச்சை, மருத்­து­வ­ம­னைக் கட்­ட­ணங்­க­ளுக்­காக குறைந்­தது $30,000 காப்­பு­றுதி வழங்­கும் பய­ணக் காப்­பு­று­தியை அவர்­கள் வாங்­கி­யி­ருக்க வேண்­டும். சிங்­கப்­பூ­ரில் தங்­கி­ இருக்­கும் காலத்­தில் வெளி­நாட்­டுப் பய­ணி­களும் உள்­ளூர்­வா­சி­களும் 'டிரேஸ்­டு­கெ­தர்' செயலி அல்­லது கரு­வி­யைப் பயன்­ப­டுத்த வேண்­டியது அவசியம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!