மனநலன் காக்க நடமாடும் நண்பர்கள் சேவை

குவீன்ஸ்டவுனில் மனநல மேம்பாட்டுச் செயல்திட்டத்தில் நடமாடும் நண்பர்கள் சேவையும் இடம்பெற இருக்கிறது.

ஒரு வாகனத்தில் ஆலோசகர், நன்கு பயிற்சி பெற்ற நண்பர்கள் இருப்பார்கள். ஒருவருக்கு எந்த அளவுக்கு ஆதரவு தேவை என்பதைக் கணிக்க மடிக்கணினியும் வாகனத்தில் இருக்கும்.

உலக மனநல தினத்தையொட்டி நேற்று குவீன்ஸ்டவுனில் மனநலச் செயல்திட்டம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நடமாடும் நண்பர்கள் சேவை இடம்பெறுகிறது.

குவீன்ஸ்டவுன் மக்களிடையே மனநலத்தின் முக்கியம் பற்றிய புரிந்துணர்வை அதிகப்படுத்தி மனநலம் தொடர்பில் நிலவும் சமூக களங்கத்தைப் போக்குவது இந்தச் செயல்திட்டத்தின் நோக்கம். 'லைன்ஸ் பீபிரண்டர்ஸ்' என்ற அமைப்பு பயிற்சி அளித்து உருவாக்கி இருக்கும் தொண்டூழியர்களும் ஆலோசகர் ஒருவரும் அந்த வாகனத்தில் இருப்பார்கள். அது வெவ்வேறான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.

வாகனத்தில் இருக்கும் ஒரு மடிக்கணினி மூலம் ஒருவரின் முக அசைவுகளை வைத்து அவரிடம் காணப்படும் நேர்மறை, எதிர்மறை உணர்வுகளைக் கண்டுபிடிக்கலாம். புளோக் 150, மெய் லிங் ஸ்திரீட் முகவரியில் அமைந்துள்ள குவீன்ஸ்டவுன் மெய் லிங் வசிப்போர் குழு நிலையத்தில் உள்ள அறையிலும் குடிமக்கள் ஆலோசகர்களுடன் முன்பதிவு மூலம் கலந்துரையாடலாம்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா இந்தச் செயல்திட்டத்தை உரு வாக்க உதவினார்.

தொடக்க நிகழ்ச்சியில் பேசிய திரு சுவா, உடல்நலனைப் போலவே மனநலனும் முக்கியம் என்றும் மனநலம் தொடர்பில் சமூகத்தில் நிலவும் தப்பெண்ணங்களைப் போக்குவதற்கு இது தக்க தருணம் என்றும் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!