சிங்கப்பூர் நிறுவனங்களின் பிரமுகர்களுடன் அமைச்சர் பேச்சு

1 mins read
a5ddd24a-7017-4e4d-b175-4666426c60b1
-

வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் இம்மாதம் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை அமெரிக்கா சென்று இருந்தார்.

அமெரிக்காவில் செயல்படும் சிங்கப்பூர் நிறுவனங்களின் பிரதிநிதிகளை நியூயார்க்கில் வட்டமேசை கூட்டத்தில் அவர் சந்தித்தார்.

அமைச்சருடன் சிங்கப்பூர் நிறுவனங்களின் தலைவர்கள் வெளிப்படையாக பல வற்றையும் விவாதித்தனர்.

அமெரிக்காவில் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உள்ள வாய்ப்புகள், சவால்கள் பற்றி அவர்கள் விவாதித்ததாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூருக்கு அப்பாலும் விரிவடைந்து வளர்ச்சி வாய்ப்புகளைத் தேட வேண்டியதன் முக்கியத் துவத்தை அவர்கள் தங்கள் விவாதிப்புகளில் வலியுறுத்தினர்.