போராடி வெல்லும் திடம் படைத்த ராஜ்கிரண்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

இளம் பரு­வத்­தில் துள்­ள­லும் துடிப்­பு­மாக இருந்த ராஜேந்­தி­ரன் ராஜ்­கி­ரண், கல்­வி­யில் சிறந்து விளங்­கி­ய­தோடு எதிர்­கா­லத்­தில் விமா­னி­யாக வேண்­டு­மென்ற லட்­சி­யத்­துடன் இருந்­தார்.

தெமா­செக் உயர்­நி­லைப் பள்­ளி­யில் ஒரு­முறை மருத்­து­வப் பரி­சோ­த­னை­யின்­போது கண்­களில் பிரச்­சினை உள்­ளது எனத் தெரிய வந்­தது. சிங்­கப்­பூர் தேசிய கண் நிலை­யத்­தில் செய்­யப்­பட்ட சோத­னை­யில், கண் விழித்­தி­ரை­யின் கட்­ட­மைப்­பைப் பாதிக்­கும் நோய் அவ­ருக்கு இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.

இத­னால் பார்வை மங்­க­லாகத் தெரி­யும். நாள­டை­வில் பார்வை மோச­ம­டை­யும். விழித்­திரை மாற்று அறுவை சிகிச்சை பரிந்­துரை செய்­யப்­பட்­டது. 15 வய­தில் இந்த எதிர்­பாரா நிகழ்வு ராஜ்­கி­ர­ணின் வாழ்க்­கையையே புரட்­டிப்­போட்­டது. லட்­சி­யம் கலைந்­திட, படிப்­பில் ஆர்­வ­மும் குறைந்­தது. எளி­தில் ஆத்­தி­ர­ம­டை­வது, உணர்ச்­சி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் தவிப்­பது போன்­ற­வற்றை அனு­ப­வித்­தார்.

அப்­போது அவ­ருக்கு ஆத­ர­வாக அவ­ரின் பெற்­றோர், உற­வி­னர்­கள், ஆசி­ரி­யர்­கள் இருந்­த­னர். அவர்­களுக்­காக மீண்டு வர வேண்­டும் என முடி­வெ­டுத்து, சாதா­ரண நிலை தேர்­வுக்­குப் பின், நீ ஆன் பல­து­றைத்­தொ­ழிற்­கல்­லூ­ரி­யில் சேர்ந்­தார். சுற்­றுப்­புற, நீர் தொழில்­நுட்­பத் துறை­யில் பயின்­றார். தொடர்ந்து தேசிய சேவை புரிந்த காலத்­தில் அங்­கிருந்த சிலர், தன்னை­விட அதிக வாழ்க்­கைச் சவால்­களை எதிர்­கொள்­வதை அறிந்­து­கொண்­டார்.

வழி­காட்டி இல்­லா­மல் அவர்­களின் வாழ்க்கை திசை­மா­றிச் சென்­றி­டும் என்­பதை உணர்ந்­தார்.

வழி தவ­றிச் செல்­வோ­ருக்கு உதவ வேண்­டும், அதையே தன் வருங்­கால பணி­யாக்­கிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். 2016ல் சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­க உள­வி­யல் துறை பட்­டப்­ப­டிப்பைப் பகுதிநேர­மாக மேற்­கொள்ள தொடங்­கி­னார் ராஜ்­கி­ரண்.

கண்­ணுக்கு எட்­டிய தூரத்­தில் இருப்­ப­வர்­களை அடை­யா­ளம் காண்­பதே சிர­மம் என்­றா­லும் வலி தாங்­கக்­கூ­டிய இத­யத்­திற்கு லட்­சி­யப் பாதையே கண்­ணுக்­குத் தெரிந்­தது.

மேம்­பட்ட பார்­வை­யு­டன் இயங்க, சிறப்பு 'லென்ஸ்' வகை­யைக் கண்­களில் பொருத்­தி­ய­வாறு தனது தின­சரி பணி­களில் ஈடு­பட்­டார்.

கடந்த ஆண்டு முழு நேர இளை­யர் சமூக ஊழி­யர் பணி­யைச் சமா­ளித்­த­வாறு பட்­டப்­ப­டிப்­பில் ஈடு­பட்­டார். அதோடு வேலை கிடைப்­ப­தற்கு முன், இந்து ஆல­யங்­களில் சிறு­வர்­க­ளுக்­குச் சமய நன்­னெ­றி­களைக் கற்­பிக்­கும் 'புரொ­ஜெக்ட் பக்தி' திட்­டத்­தில் தொண்­டூ­ழி­ய­ராக சேவை­யாற்­றி­னார்.

நீண்ட நேரம் கணி­னித் திரை­யைப் பார்த்­துப் படிப்­ப­தும் விசைப்­ப­ல­கை­யில் எழுத்­து­க­ளைப் பதி­வு­செய்­வ­தும் கண் வலி­யை­யும் அவ்­வப்­போது தலை­வ­லி­யை­யும் தரும்.

பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குப் பேருந்­துப் பய­ணம் மேற்­கொள்­வது, திரை­யைப் பார்த்­துக் கற்­கும் பாடத்­தைப் புரிந்­து­கொள்­வது போன்­ற­வற்­றால் சிர­மம் ஏற்பட்­டா­லும் இவற்றை இயல்­பாக எடுத்­துக்­கொள்­ளும் பக்­கு­வத்தை அவர் வளர்த்­துக்­கொண்­டார். படிப்­ப­தற்கு நீண்ட நேரம் எடுத்­துக்­கொண்­டா­லும் தொடர்ந்து படிப்­பேன் என்­றது அவர் மனம்.

சில வேளை­களில் திரை­யைப் பார்த்­துப் படிப்­ப­தற்­குப் பதி­லாக புத்­த­கங்­க­ளைப் புரட்­டிப் படிப்­பேன் எனச் சந்­திக்­கும் சவால்­க­ளுக்கு மாற்று வழி­களை நாடி­னார்.

பல ஆண்­டு­ உழைப்­பின் பல­னாக, கடந்த வாரம் நடந்த சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கப் பட்­ட­ம­ளிப்பு விழா­வில் சிறப்­புத் தேர்ச்சி பெற்­றி­ருந்­தார். ஆண்டு இறு­திக்­குள் தம் 'ஹானர்ஸ்' பட்­டத்­தை­யும் பூர்த்தி செய்­ய­வுள்­ளார்.

"வாழ்க்­கை­யில் வெற்றி கண்­டா­லும் தோல்வி அடைந்­தா­லும் அது என்­னு­டைய பொறுப்பே, பிறரை அது பாதிக்­கக்­கூ­டாது. அப்­படி வெற்றி கண்­டால், அது எனக்கு ஆத­ர­வாக இருந்த அனை­வ­ருக்­கும் கிடைத்த வெற்­றி­யா­கும்," என்று கூறி­னார் எதிர்­கா­லத்­தில் ஆலோ­சனை வழங்­கும் உள­வி­யல் நிபு­ண­ராக பணி­யாற்ற விரும்­பும் 27 வயது ராஜ்கிரண்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!