அனுபவப் பாடங்களை ராப் பாடல்களாக மாற்றும் சன்ஜய்

கி. ஜனார்த்­த­னன்

'ராப்' பாடல்­க­ளைப் பாடு­வது அத்­தனை சுல­ப­மல்ல. பின்­னணி இசை­யு­டன் சொற்­களை மிக விரை­வாக, சந்த நயத்­து­டன் பேசிக்­கொண்டே பாடு­வ­தில் பல நுணுக்­கங்­கள் அடங்­கி­யுள்­ளன.

இவ்­வ­கைப் பாடல்­க­ளைப் பாடு­வ­தில் வளர்ந்து வரும் ஒரு நட்­சத்­தி­ர­மா­கத் திகழ்­கி­றார், 19 வயது சன்­ஜய் சாமி­நா­தன்.

மக்­கள் அதி­க­மாக நாடும் சமூக ஊட­கங்­கள்­தான், தன் திற­மையை வெளிக்­காட்­டு­வ­தற்­கான தளத்தை அளித்து வரு­வ­தாக சன்­ஜய் கூறி­னார்.

மூன்று ஆண்­டு­களில் இவர் மூன்று ராப் இசைத் தொகுப்­பு­களை வெளி­யிட்டு இணை­ய­வா­சி­கள் பல­ரது பாராட்­டை­யும் பெற்று வரு­கிறார். தமது உண்மை வடி­வத்தை வெளிப்­ப­டுத்­தும் ஒரே வழி­யாக இசை­யைக் கரு­து­வ­தாக இந்த இளை­யர் கூறு­கி­றார்.

சிறு வயது முதல் தமிழ்ப் பாட்­டுப் போட்­டி­க­ளி­லும் குடும்ப நிகழ்ச்­சி­க­ளி­லும் பாடி வந்த சன்­ஜெய், தமது 15வது வய­தில் முதல் ராப் காணொ­ளியை யூடி­யூப் தளத்­தில் வெளி­யிட்­டார்.

அது­வரை, எதிர்­கா­லத்­தில் முழு­நேர இசைக்­க­லை­ஞ­ராக வேண்­டும் என்ற தன் விருப்­பத்­தைக் கூறி­ய­சன்­ஜ­யைப் பல­ரும் பல­வாறு கேலி செய்­த­னர்.

"நான் நினைத்­ததை என்­னால் அடைய முடி­யாது என்று எனது ஆசி­ரி­யர் ஒரு­முறை கூறி­னார். இது என் மன­தைப் புண்­ப­டுத்­தி­யது," என்­றார் இந்த இளை­யர்.

இணைய வதைக்கு இவர் ஆளா­ன­போ­தும் தொடர்ந்து முயன்று இறு­தி­யில் இசைத் தயாரிப்­பா­ளர் ஒரு­வ­ரின் ஆத­ர­வைப் பெற்­றார்.

"அப்­போ­து­தான் என்­னைக் கேலி செய்­வ­தைப் பலர் நிறுத்­தினர். டேன் ரஃபெல் என்ற தயா­ரிப்­பா­ள­ரின் ஆத­ர­வைப் பெற்­றுள்­ள­தால் எனது தன்­னம்­பிக்கை அதி­கரித்­தது," என்று சன்­ஜய் கூறி­னார்.

தமக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­களை­யும் உணர்ச்­சி­க­ளை­யும் இசை­வழி ஆக்­க­பூர்­வ­மா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தால் சமூக ஊட­கங்­களில் இவ­ரது படைப்­பு­கள் பெரி­தும் வர­வேற்பு பெற்­ற­தாக அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

தற்­போது இவர் பிர­பல ராப் கலை­ஞ­ரான டிரெ­விஸ் ஸ்காட் என்­ப­வ­ரின் 'மெலோ­டிக் ராப்' பாணி­யைப் பின்­பற்றி வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

இந்­தப் பாணி தனக்கு ஏற்­றது என உண­ரும் வரை பல்­வேறு பாணி­களில் முயற்சி செய்து அதில் தோல்­வி­யை­யும் சந்­தித்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

ஆயி­னும், விமர்­ச­னங்­களை ஏற்­றுக்­கொண்டு தன்­னைத் திருத்­திக்­கொள்ள முற்­ப­டும்­போ­து­தான் கலை­ஞர்­க­ளின் தரம் மேம்­படும் என்று சன்­ஜய் கூறி­னார்.

இந்­தப் பாதை­யில் செல்­வ­தற்­குத் தம்­மு­டைய தந்தை பெரும் ஊக்­கம் தந்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

தொடக்­கத்­தில் தமது மகன் ராப் செய்து வரு­வது தமக்­குத் தெரி­ய­வில்லை என்று சன்­ஜ­யின் தந்தை 55 வயது எம். சாமி­நா­தன் கூறி­னார்.

மூத்த பாது­கா­வல் அதி­கா­ரி­யாக பணி­பு­ரி­யும் திரு சாமி­நா­தன், தம் மகன் தவ­றான வழி­யில் போகா­மல் படிப்­பின் மீது கவ­னம் செலுத்­து­வார் என்ற நிபந்­த­னையை சன்­ஜ­யி­டம் முன்­வைத்­தார்.

மக­னுக்­குத் தமது ஆத­ர­வு­டன் ஒலிப்­ப­தி­வு­க­ளைச் செய்­வ­தற்­கான பணத்­தை­யும் வழங்­கி­னார்.

ஆனா­லும் போட்­டித்­தன்மை மிக்க இசைத்­து­றை­யில் சன்­ஜ­யால் முழு நேரக் கலை­ஞ­ரா­கத் தாக்­குப்­பி­டிப்­பது மிகக்­க­டி­னம் என்­பது இவ­ரது கருத்து.

தற்­போது தொழிற்­கல்­விக் கழ­கத்­தின் மத்­திய கல்­லூ­ரி­யில் இயந்­தி­ர­வி­யல் இரண்­டாம் ஆண்­டில் பயி­லும் சன்­ஜய், பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர விரும்­பு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!