உலகிலேயே செல்வாக்குமிக்க சிங்கப்பூர் கடப்பிதழ்

1 mins read
c4685cf1-33c0-4482-9595-ba72655be631
முதல்நாளிலேயே தனது இணையவாயில் வழியாக கிட்டத்தட்ட 2,500 கடப்பிதழ் விண்ணப்பங்கள் வந்துசேர்ந்ததாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது. கோப்புப்படம்: திமத்தி டேவிட் -

சிங்கப்பூரும் ஜப்பானும் உலகிலேயே செல்வாக்குமிக்க கடப்பிதழ்களை வைத்திருப்பதாக உலகக் குறியீடு ஒன்று காட்டுகிறது. இவ்விரு நாடுகளைச் சேந்ந்தவர்கள் விசா இல்லாமலேயே 192 நாடுகளுக்குச் செல்லலாம்.

இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரலில் ஜப்பானிய கடப்பிதழ், சிங்கப்பூரைக் காட்டிலும் செல்வாக்குமிக்கதாக இருந்தது. விசா இல்லாமலேயே ஐப்பானிய கடப்பிதழ் கொண்டுள்ள ஒருவர் 193 நாடுகளுக்குச் செல்ல முடிந்தது. சிங்கப்பூர் கடப்பிதழைக் கொண்டுள்ளோர், 192 நாடுகளுக்குச் செல்ல முடிந்தது.

ஆக அண்மைய தகவலின்படி, தென்கொரியாவும் ஜெர்மனியும் இரண்டாவது நிலையை இணையாகப் பெற்றுள்ளன. இந்தக் கடப்பிதழ்களைக் கொண்டு விசா இன்றி 190 = நாடுகளுக்குச் செல்லலாம்

கடந்த ஆண்டு 84ஆம் இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 90வது இடத்திற்கு இறங்கியது.