இல்லத் தனிமை உத்தரவை மீறியவருக்குச் சிறை

இல்­லத் தனிமை உத்­த­ரவை மீறிய முழு­நேர சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தேசிய சேவை­யா­ள­ருக்கு 18 வார சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 23 வயது ஃபதுல்லா அப்­துல் ரஹ்­மா­னுக்கு கொவிட்-19 அறி­கு­றி­கள் இருந்­த­தால் அவ­ருக்கு இல்­லத் தணிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் 17ஆம் தேதி­யன்று அவ­ருக்கு சளி, தொண்டை வலி, இரு­மல் ஏற்­பட்­டது.

அவ­ரது மூச்­சுக் குழா­யின் மேற்­ப­கு­தி­யில் தொற்று ஏற்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ருக்கு கொவிட்-19 பரி­சோ­தனை செய்த மருத்­து­வர் முடி­வு­கள் வெளி­வ­ரும் வரை வீட்­டி­லேயே இருக்­கு­மாறு கூறி­னார். அவ­ருக்கு மருத்­துவ விடுப்பு வழங்­கப்­பட்­டது.

இருப்­பி­னும் அவர் இல்­லத் தனிமை உத்­த­ர­வுக்கு உட்­ப­டா­மல் பூகிஸ் ஜங்­ஷ­னுக்­கும் சாமர்­சட்­டில் உள்ள சறுக்கு விளை­யாட்­டுப் பூங்­கா­வுக்­கும் சென்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது பிறகு உறுதி செய்­யப்­பட்­டது.

மருத்­துவ விடுப்­பில் இருந்­த­போது இல்­லத் தனிமை உத்­த­ரவை மீறி நான்கு முறை வெளியே சென்­றார்.

இது­தொ­டர்­பாக அவர் மீது நான்கு குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கின. ஃபதுல்­லா­வுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­ட­தும் அவர் சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். அங்கு அவர் நான்கு நாட்­கள் தங்கி சிகிச்சை பெற்­றார்.

அதனை அடுத்து, அவர் பாசிர் ரிஸ் வட்­டா­ரத்­தில் உள்ள டி'ரிசோர்ட்­டில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி­யன்று அவர் வீடு திரும்­பி­னார்.

இல்­லத் தனிமை உத்­த­ரவை மீறி அவர் சிங்­கப்­பூர் எக்ஸ்போ, தெம்­ப­னிஸ் வட்­டா­ரத்­தில் உள்ள இக்­கியா கடைத்­தொ­குதி, காலாங் ஆகிய இடங்­க­ளுக்­குச் சென்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் பிரி­வுத் தலை­வ­ரா­வ­தற்­குத் தேவை­யான பயிற்­சி­யில் ஈடு­பட ஃபதுல்லா தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருந்­த­தா­க­வும் ஆனால் இல்­லத் தனிமை உத்­த­ரவை அவர் மீறி­ய­தால் அந்த வாய்ப்பை அவர் இழந்­து­விட்­ட­தா­க­வும் அவ­ரது வழக்­

க­றி­ஞர் திரு­வாட்டி யமுனா

பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!