அதிகரித்தது 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' பங்கு விலை

அதிகரித்தது 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' பங்கு விலை

1 mins read
130524dd-a832-430a-b424-53249acb6469
-

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் திட்டம் 11 நாடு­களுக்­குச் செயல்­ப­டுத்­தப்­பட்டதைத் தொடர்ந்து 'சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ்' விமான நிறு­வ­னத்­தின் பங்கு விலை­கள் பெரிய அளவில் அதி­க­ரித்­தன.

பய­ணத் திட்டத்தை எந்­த நாடு­களுக்­குத் திறந்­து­வி­ட­லாம் என்று பரி­சீ­லிக்­கப்­பட்­ட­போதே நிறு­வ­னத்­தின் பங்­கு­களை வாங்­கு­வ­தில் அதிக அக்­கறை காட்­டப்­பட்­டது. பய­ணத் திட்டம் குறித்த தக­வல்­கள் வெளி­யி­டப்­பட்­ட­வு­டன் அதன் பங்கு விலை கிட்­டத்­தட்ட ஒன்­பது விழுக்­காடு அதி­க­ரித்­தது.

'எஸ்­ஐஏ இஞ்­சி­னி­ய­ரிங்' நிறு­வ­னத்­தின் பங்கு விலை பெரிய அள­வில் 2.20 வெள்­ளி­யைத் தொட்ட பிறகு சற்று குறைந்து 2.17 வெள்­ளி­யா­கப் பதி­வா­னது. நற்­செய்­தி­யால் அதி­க­ரித்த பங்கு விலை­கள் தொடர்ந்து இவ்­வாறே இருக்­குமா என்­ப­தைப் பார்க்­க­வேண்­டும் என்று சில தரப்­பி­னர் கூறு­கின்­ற­னர்.