இளம் ‘டுகோங்’ விலங்கின் உடலில் காயங்கள் காணப்படவில்லை

'டுகோங்' எனப்­படும் பாலூட்டி விலங்­கின் சட­லம் கடந்த சனிக்­கிழமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அதைப் பரி­சோ­தனை செய்­த­தில் அது பலத்த காயத்­தால் உயிர் இழக்­க­வில்லை என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இருப்­பி­னும், அந்த விலங்கு மாண்ட கார­ணத்­தைக் கண்­ட­றிய, தொடர்ந்து சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக் கழ­கத்­தின் லீ கொங் சியன் இயற்கை வர­லாற்று அரும்­பொ­ரு­ள­கத்­து­ட­னும் உயி­ரி­யல் அறி­வி­யல் துறை­யு­ட­னும் சேரந்து பணி­யாற்றி வரு­வ­தாக தேசிய பூங்­காக் கழ­கம் தெரி­வித்­தது.

அரு­கி­வ­ரும் உயி­ரி­னத்­தைச் சேர்ந்த அந்த டுகோங்­கின் சட­லம் கட­லில் மிதந்­த­வாறு சிங்­கப்­பூ­ரின் தென் தீவு­களில் ஒன்­றான புலாவ் ஹந்­து­வுக்கு அரு­கில் பொழு­து­போக்கு முக்­கு­ளிப்­பா­ளர்­க­ளால் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

தேசிய பூங்­காக் கழ­கத்­தின் டாக்­டர் கெரி­யேன், இளம் டுகோங்­கு­கள் முதிர்ச்சி அடை­யும் வரை தாயு­டன் இருப்­பது வழக்­கம். இறப்­புக்கு முன்­னால் குட்­டி­யும் தாயும் பிரிந்­தி­ருக்­க­லாம் என்று கூறி­னார்.

அரும்­பொ­ரு­ள­கத்­தில் பாலூட்டி இன ஆய்­வா­ள­ரான மார்­கஸ் சுவா மாண்ட டுகோங் குட்­டி­யின் அளவு 1.4 மீட்­டர் என்­றும் டுகோங்­கு­கள் சாதா­ர­ன­மாக 2.4 மீட்­டர் அள­வுக்கு வள­ரும் என்­றும் விளக்­கி­னார். மேலும் டுகோங் குட்­டி­கள் நீண்ட காலம் தாய் டுகோங்­கால் பரா­ம­ரிக்­கப்­படும் என்­றும் கூறி­னார்.

குட்டி தாயி­ட­மி­ருந்து பிரிக்­கப்­பட்­டி­ருந்­தால் அத­னால் உயிர் வாழ்ந்­தி­ருக்­கா­மல் போயி­ருக்­கும். ஏனே­னில் குட்­டி­க­ளுக்கு கடல் புல்­லும் தாய்ப்­பா­லும் தேவைப்­படும். அது­மட்­டு­மின்றி, சுய­மாக உயிர் வாழ குட்­டிக்­குத் தாய் டுகோங் கற்­றுக் கொடுக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

பரி­சோ­த­னை­யில் குட்­டி­யின் வயிறு நிறைய உணவு இருந்­ததை வைத்து, இறப்­புக்கு முன் அது இரை தின்­றி­ருக்­கும் என்று கூறப்­பட்­டது. இது கவலை தரும் நிகழ்­வாக இருந்­தா­லும் டுகோங்­கு­கள் சிங்­கப்­பூர் கடல்­களில் பெருகி வரு­வ­தன் ஆதா­ர­மா­க­வும் திகழ்­கிறது என திரு சுவா கூறி­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!