விதிமீறிய 8 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து

1 mins read
13fafee6-60e4-4576-9b40-73c9796d705d
-

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு விதி­மு­றை­க­ளைத் தொடர்ந்து மீறி­ய­தற்­காக எட்டு இரவு விடு­தி­கள், உண­வகங்­கள் ஆகி­ய­வற்­றின் உரி­மங்­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த எட்டு இடங்­க­ளை­யும் பத்­தி­லி­ருந்து 30 நாட்­க­ளுக்கு மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. விதி­மு­றை­களை மீறி­ய­தற்­காக அவற்றின்மீது மீது குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கக்­கூ­டும். விதிக்­கப்­பட்ட வரம்­புக்கு மீறி அதி­க­மா­னோர் ஒன்­று­கூ­டி­யது போன்ற விதி­மீ­றல்­கள் நிகழ்ந்­த­தாக அறி­யப்­ப­டு­கிறது. அர­சாங்க அதி­கா­ரி­கள் அதி­ர­டிச் சோத­னை­களை நடத்­திய போது இந்த எட்டு இடங்­களில் நிகழ்ந்த விதி­மீ­றல்­கள் வெளிச்­சத்­துக்கு வந்­தன. கொன்­கார்ட் ஹோட்­ட­லில் உள்ள கிளப் ஒன் மின், ஓரி­யன்­டல் பிளா­சா­வில் உள்ள கிளப் மாவ், விவா விஸ்டா கடைத்­தொ­கு­தி­யில் உள்ள ஹூஹா உண­வ­கம் ஆகி­யவை உரி­மம் ரத்து செய்­யப்­பட்ட எட்டு இர­வு­வி­டு­தி­கள், உண­வ­கங்­களில் அடங்­கும். கொவிட்-19 விதி­மு­றை­களை மீறு­வோ­ருக்கு ஆறு மாதங்­கள் வரை சிறைத் தண்­டனை, $10,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.