கிருமித்தொற்றால் மேலும் பத்து முதியவர்கள் மரணம்

நேற்று முன்­தி­ன நில­வ­ரப்­படி கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் மேலும் பத்து முதி­ய­வர்­கள் மாண்­டு­விட்­ட­னர். மாண்­ட­வர்­கள் 73 வய­துக்­கும் 93 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. அவர்­களில் ஏழு பேர் ஆட­வர்­கள், மூவர் பெண்­கள். இதன்­மூ­லம் சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றால் மாண்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 172ஆக அதி­க­ரித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் மாண்­ட­வர்­களில் நான்கு பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள். மூவர் ஒரு தடுப்­பூசி மட்­டும் போட்­டுக்­கொண்­ட­வர்­கள். மூவர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள்.

மாண்ட பத்து பேரும் ஏற்­கெ­னவே வேறு நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள். அவர்­க­ளுக்கு என்­னென்ன நோய்­கள் இருந்­தன என்­பது குறித்து சுகா­தார அமைச்சு தக­வல் வெளி­யி­ட­வில்லை.

இதற்­கி­டையே, நேற்று முன்­தி­னம் நண்­ப­கல் நில­வ­ரப்­படி மொத்­தம் 2,263 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. சமூக அள­வில் 1,949 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். அவர்­களில் 388 பேர் 60 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள். வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான தங்­கு­வி­டு­தி­களில் 306 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த எட்டு பேருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

கடந்த வார­யி­று­தி­யில் செய்­யப்­பட்ட கொவிட்-19 பரி­சோ­த­னை­களில் இவர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது தெரி­ய­வந்­தது. வார­யி­று­தி­ நாட்களில் குறைந்த அள­வி­லான பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­ப­டு­வது வழக்­கம் என்று சுகா­தார அமைச்சு கூறி­யது. நேற்று முன்­தி­னம் பதி­வான எண்­ணிக்­கை­யு­டன் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 129,229ஆக

அதி­க­ரித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!