விலையைக் கூட்டாத எண்ணெய் விநியோக நிறுவனம்

விலையைக் கூட்டாத எண்ணெய் விநியோக நிறுவனம்

1 mins read
fb3566d5-2c4c-4260-8c62-70d6564169c4
-

கொள்ளைநோய் மீட்சியைத் தொடர்ந்து சிங்கப்பூரில் பெட்ரோல், டீசல் விலைகள் புதிய உச்சத்தைத் தொட்டபோதிலும் குறைந்தபட்சம் ஒரு நிறுவனம் மட்டும் அந்த விலைகளைக் கூட்டவில்லை. சீனாவுக்குச் சொந்தமான எஸ்பிசி நிறுவனம்தான் அது. ஜூலை 7ஆம் தேதிக்குப் பிறகு அதன் தனது எண்ணெய் விலைகளில் மாற்றம் செய்ய வில்லை.

இங்குள்ள இதர எண்ணெய் விநியோக நிறுவனங்கள் ஒரு லிட்டர் எரிபொருளின் விலையை ஆறு விழுக்காடு முதல் எட்டு விழுக்காடு வரை உயர்த்திவிட்ட நிலையில் எஸ்பிசி நிறுவன எண்ணெய் விலைகள் பழைய விலையிலேயே தொடருகின்றன. அதன் காரணமாக சந்தையில் தற்போதுள்ள ஆகக் குறைவான விலை உள்ள எரிபொருளை இந்நிறுவனம் வழங்குகிறது. எஸ்பிசியின் 95 ஆக்டன் பெட்ரோல் லிட்டர் விலை $2.49. ஷெல், கால்டெக்ஸ், எஸ்ஸோ போன்றவற்றின் விலையைவிட இது குறைவு.