மனநலப் பராமரிப்புக்கு நிறுவனங்களின் ‘தொழில்நுட்ப ஆதரவு’

ஊழியர்களின் மனநலப் பராமரிப் புக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆதரவை வழங்க சிங்கப்பூர் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இணைய ஆலோசனைகள், கைபேசிச் செயலிகள் போன்றவற்றின் மூலம் இந்த ஆதரவு வழங்கப்படும்.

சிங்கப்பூரில் மனநலப் பராமரிப் புக்கும் நல்வாழ்வுக்கும் தொழில்நுட்ப வளங்களை நாடும் போக்கை கொவிட்-19 நிலவரம் மேம்படுத்திவிட்டது. அதற்கான தீர்வுக்குக் கைகொடுக்க அரசாங்கம் சார்பில் பல்வேறு இலவச ஆலோசனையும் ஆதரவும் வழங்கப்படுகிறது. 15 மாதத்திற்கு முன் தொடங்கப்பட்ட mindline.sg என்னும் இணையத்தளமும் அதில் அடங்கும்.

அதேநேரம் கட்டணம் செலுத்தக்கூடிய தீர்வுகளும் உள்ளன. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு உதவ தொழில்நுட்பத் தளங்கள் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தால் கட்டணச் சேவைகள் வளர்ந்து வருகின்றன.

MindFi என்னும் கைபேசிச் செயலி கட்டணச் சேவையை வழங்குகிறது.

சிங்கப்பூர் தொழில்முனைவரால் உருவாக்கப்பட்ட இச்செயலி, கொள்ளை நோய் சூழலில் வர்த்தகச் சந்தையில் உள்ள தனிநபர் முதல் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுவோர் வரை பலதரப்பட்டவர்களுக்கும் சேவையாற்றுகிறது.

இதற்கு ஆசியா முழுவதும் 30 பெருநிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளன.

சுமார் 100,000 ஊழியர்களைக் கொண்ட உணவு விநியோக நிறுவனமான 'கிராப்'பும் அவற்றுள் அடங்கும்.

ஜோர்ன் லீ என்பவரால் தொடங்கப்பட்ட MindFi, மனநலப் பயிற்சி மூலம் எவ்வாறு சாந்தமடைவது என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியது.

தனிப்பட்டவர்களை இலக்காகக் கொண்ட இச்செயலி இலவசமாகவும் கட்டண அடிப்படையிலும் வழங்கப்பட்டு வந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!