செய்திக்கொத்து

உலகப் பொருளியல் கருத்தரங்கில் பிரதமர் லீ உள்ளிட்ட தலைவர்கள்

சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் புளூம்பெர்க் புதிய பொருளியல் கருத்தரங்கில் பிரதமர் லீ சியன் லூங், அமெரிக்க வர்த்தக அமைச்சர் கினா ரெய்மோண்டோ, டிக் டாக் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி சியூ ஷோவ் ஸி போன்றோர் பங்கேற்க உள்ளனர். இந்தக் கருத்தரங்கு நவம்பர் 16 முதல் 19 வரை நடைபெறுகிறது.

உலகின் தலைசிறந்த அரசாங்கத் தலைவர்கள் மற்றும் வர்த்தகர்களை உள்ளடக்கிய இதேபோன்றதொரு கருத்த ரங்கு கடந்த ஆண்டு கொவிட்-19 சூழல் காரணமாக மெய்நிகர் வாயிலாக இடம்பெற்றது. உலகளவிலான சவால்களை அந்தத் தலைவர்கள் அப்போது விவாதித்தனர். அமெரிக்க ஊடக பிரபலம் மைக்கல் புளூம்பெர்க் என்பவர் 2018ஆம் ஆண்டு தொடங்கி வைத்த இந்த உலகக் கருத்தரங்கின் முதல் நிகழ்வு சீனாவில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அப்போது வர்த்தகப் பூசல் நிலவியதன் காரணமாக சிங்கப்பூருக்குக் கருத்தரங்கு மாற்றப்பட்டது. இருப்பினும் அடுத்த கருத்தரங்கை 2019ல் சீனா ஏற்று நடத்தியது.

இவ்வாண்டின் கருத்தரங்கில் 51 நாடுகளைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் அரசாங்கத் தலைவர்கள், பொதுத் துறைத் தலைவர்கள் மற்றும் உலக நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு ரயில் திட்டப் பணிகள்: சிங்கப்பூர் நிறுவனங்கள் கைகோப்பு

அனைத்துலக அளவிலான ரயில் திட்டங்களை மேற்கொள்ள 'எம்எஸ்ஐ குளோபல்' என்னும் நிறுவனத்துடன் 'எஸ்டி என்ஜினியரிங்' (சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் என்ஜினியரிங்) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது.

'எம்எஸ்ஐ குளோபல்' என்பது நிலப்போக்குவரத்து ஆணையத்தின் துணை நிறுவனமாகும்.

ஒப்பந்தப்படி இவ்விரு நிறுவனங்களும் வெளிநாடுகளின் ரயில் திட்டங்களுக்குத் தேவைப்படும் ரயில் மின்னியல் தீர்வுகளையும் சேவைகளையும் இணைந்து வழங்கும். நேற்று வெளியிடப்பட்ட நிறுவனங்களின் கூட்டறிக்கை இதனைத் தெரிவித்தது. அத்துடன், உலக அளவிலான ரயில் திட்டங்களில் சிங்கப்பூர் தடம் பதிப்பதற்கான சந்தை நடவடிக்கைகளை மேம்படுத்துவதும் ஒப்பந்தத்தில் அடங்கும். நவீனமய விவேக பெருநகர ரயில் திட்டங்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை எஸ்டி என்ஜினியரிங் வழங்கும். அதேநேரம் நுழைவுச்சீட்டுகள் மற்றும் தொகை வரவு போன்றவற்றின் மென்பொருள் தீர்வுகளுக்குத் தேவைப்படும் நிபுணத்துவத்தை 'எம்எஸ்ஐ குளோபல்' அளிக்கும்.

வந்து செல்லும் இருப்புகளுக்கான கணினிமுறை ஒருங்கிணைப்பு, சமிக்ஞை முறை, மின் விநியோக முறை, பணி

மனைத் திட்டமிடல் மற்றும் திட்ட நிர்வாகம் போன்றவற்றிலும் 'எம்எஸ்ஐ குளோபல்' கவனம் செலுத்தும்.

தற்போது ஏற்படுத்தப்பட்டு இருக்கும் புரிந்துணர்வு

ஒப்பந்தம் சிங்கப்பூருக்கு வெளியிலான ஒத்துழைப்புடன் தொடர்புடையது என்று 'எம்எஸ்ஐ குளோபல்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சிம் வீ மெங் கூறினார். எஸ்டி இன்ஜினி யரிங் பங்குகளின் விலை நேற்று 10.33 மணிக்கு $3.90 என்ற அளவில் வர்த்தமானது. இது, முந்திய நாளைக் காட்டிலும் 03. விழுக்காடு குறைவு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!