அத்துமீறி குடியிருப்பாளர்களின் வீடுகளில் புகுந்து பணம், பொருட்களைத் திருடிய கட்டட மேலாளர்

கட்­டட மேலா­ளர் தே ஜியாஹீ, தான் உரு­வாக்­கிய கட்­டட நுழைவு அட்­டை­யைப் பயன்­ப­டுத்தி ஸ்காட்ஸ் ஸ்கு­வே­ரில் உள்ள கொண்­டோ­மி­னிய வீடு­க­ளுக்­குள் நுழைந்து $28,000 ரொக்­கத்­தை­யும் கிட்­டத்­தட்ட $86,000 மதிப்­புள்ள 'ஹமீஸ்' கைப்­பை­க­ளை­யும் திரு­டி­னார்.

37 வய­தா­கும் திரு தே குற்­றங்­களை நேற்று நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார்.

தீர்ப்­ப­ளிப்பின்­போது வேறு இரு வீடு­களில் அவர் திரு­டிய குற்­றங்­களும் கருத்­தில் கொள்­ளப்­படும்.

அவ்­விரு வீடு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ர­ரான திரு தே, $2,000 மதிப்­புள்ள கால­ணி­க­ளை­யும் இரண்டு புத்­த­கங்­க­ளை­யும் சென்ற ஆண்டு திரு­டி­னார்.

மூன்­றாண்­டு­க­ளுக்கு முன்பு தமது கட்­டட நுழைவு அட்­டையை வீட்­டில் மறந்து வைத்­து­விட்டு வேலைக்கு திரு தே வந்­த­போது முதன்­மு­த­லில் அவர் சுய­மாக ஒரு கட்­டட நுழைவு அட்­டையை உரு­வாக்­கி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த மார்ச் மாதம் திரு தே பணி­யி­லி­ருந்­த­போது ஒரு குறிப்­பிட்ட வீட்­டிற்­கான தனி­யார் மின்­தூக்­கி­யைப் பயன்­ப­டுத்தி, அவ்­வீட்­டி­னுள் நுழைந்து $10,900 மதிப்­புள்ள 'ஹமீஸ்' கைப்­பை­யைத் திரு­டி­னார்.

கடந்த மே மாதம் வேறொரு வீட்­டுக்­குள் நுழைந்து நிலைப்பேழை ஒன்­றில் பல கடித உறை­கள் இருந்­த­தைத் கண்­டார்.

அவற்­றில் இரண்­டைத் திரு­டி­னார். அவற்­றுள் இருந்த $28,000 பணத்தை திரு தே தமது வங்­கிக்­க­ணக்­கில் போட்­டுக்­கொண்­டார்.

மூன்­றா­வ­தாக ஒரு வீட்­டில் நுழைந்து $87,000 பெறு­மா­ன­முள்ள இரண்டு 'ஹமீஸ்' கைப்­பை­கள், ஒரு மோதி­ரம், ஒரு கைக்­க­டி­கா­ரம் ஆகி­ய­வற்­றைத் திரு­டி­னார்.

போலி­சார் கடந்த ஆண்டு செப்­டம்­பர் எட்­டாம் தேதி விசா­ர­ணை­களைத் தொடங்­கி­னர்.

விரை­வில் திரு தே பிடி­பட்­டார். அவ­ரது வீட்­டி­லி­ருந்து திருட்­டுப்­போன ஒரு 'ஹமீஸ்' கைப்பை கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

நீதி­பதி கெஸ்­லர் சோ, மிகுந்த மனச்­சோர்­வுக் பிரச்சினையுள்ள திரு தேக்­குக் கட்­டாய சிகிச்சை ஆணை­யைப் பிறப்­பித்­துள்­ளார்.

இவ்­வாணை பிறப்­பிக்­கப்­பட்­டோர் சிறைத் தண்­ட­னைக்­குப் பதி­லாக மன­நல சிகிச்சை பெற வேண்­டும். நவம்­பர் ஒன்­ப­தாம் தேதி இவ்­வ­ழக்­கின் தொடர்­பில் தீர்ப்­பளிக்­கப்­படும்.

ஒவ்­வொரு திருட்­டுக்­கும் குற்­ற­வா­ளிக்கு ஏழாண்டு சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­படலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!