கர்ப்பிணியான காதலியை உதைத்து துன்புறுத்திய ஆடவருக்கு ஐந்து மாதச் சிறை

கர்ப்­பி­ணி­யான தமது காதலி, தம்முடன்­ வசிக்க மறுத்­த­தால் கோபி­நாத் ராஜா என்ற ஆடவர், ஒரு பள்ளியின் நிர்­வாக அதி­காரியாகப் பணி­பு­ரிந்­து­கொண்­டி­ருந்த அந்தப் பெண்ணைத் தாக்­கி­னார்.

அந்தப் பெண் கிட்­டத்­தட்ட நான்கு மாதங்­கள் கர்­ப்ப­மாக இருந்­ததை அறிந்­தி­ருந்­தும், 29 வயது கோபி­நாத் அவரை வயிற்­றுப்­ப­குதி­யில் உதைத்து, தலை­மு­டி­யைப் பிடித்து இழுத்து அவ­ரைத் தரை­யில் தர தர என்று இழுத்­துச் சென்­றார்.

இக்­குற்­றங்­களை ஒப்­புக்­கொண்ட கோபி­நாத்­துக்கு நேற்று முன்­தி­னம் ஐந்து மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அரசு ஊழி­யர் ஒரு­வர் தமது பணி­யைச் செய்­வ­தைத் தடுத்­தது, அவர் மீது தகாத சொற்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யது, சமு­தா­யத்­தில் சட்­ட­வி­ரோ­த­மாக நடந்­து­கொண்­டது ஆகிய குற்­றங்­கள் அவர் மீது சாட்­டப்­பட்­டன. இது போன்ற மேலும் ஏழு குற்­றச்­சாட்­டு­கள் கருத்­தில் கொள்­ளப்­பட்­டன.

முக்­கு­ளிப்­பா­ளரா­கப் பணி­பு­ரிந்த கோபி­நாத்­துக்கும் அவ­ரது காத­லிக்­கும் இடையே இவ்வாண்டு ஆகஸ்ட் நான்­காம் தேதி தொலை­பே­சி­யில் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­ட­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

சீற்­றம் கொண்ட கோபி­நாத், அவ­ரது காதலி பணி­பு­ரிந்த உயர்­நிலைப் பள்­ளிக்­குச் சென்று தக­ராறு செய்­தார். பள்­ளி­யில் பணி­புரிந்­த மற்­ற­வர்­கள் இதைக் கவ­னித்து, தலை­யிட்டு போலி­சாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பாதிக்­கப்­பட்ட அந்த 30 வயது பெண்­ணுக்குத் தலை­யி­லும் உட­லி­லும் பல காய­ங்கள் ஏற்­பட்டு, தேசிய பல்­க­லைக்கழக மருத்­து­வ­மனைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.

அங்கு நடந்த பரி­சோ­த­னை­களுக்­குப் பிறகு, வயிற்றில் வளரும் சிசு­வுக்கு எந்தப் பாதிப்­பும் இல்லை என்று கண்­ட­றி­யப்­பட்­டது.

போலிஸ் அதி­கா­ரி­கள் கோபி­நாத்தை ஓர் அடுக்­கு­மா­டிக் கட்­ட­டத்­தின் அடி­யில் தடுத்து நிறுத்­தி­ வைத்திருந்த­போது அவர் முரட்­டுத்­த­ன­மாக நடந்­து­கொண்­ட­தோடு அவர்களிடம் தகாத வார்த்­தை­களை­யும் பயன்­ப­டுத்­தி­னார்.

டிசம்­பர் 2019ல் நிகழ்ந்த ஓர் இறுதிச் சடங்கு ஊர்­வ­லத்­தில் கோபி­நாத் குண்­டர் கும்­ப­லு­டன் தொடர்­பு­டைய சைகை­க­ளைக் காட்டி, அதனோடு தொடர்­பு­டைய வாச­கங்­களையும் உரக்கக் கத்­தி­னார் என்­றும் தெரியவந்­துள்­ளது. போலி­சார் அவரை எச்­ச­ரித்­தும் அவர் மீண்­டும் அவ்­வாறு செய்ய, கோபி­நாத் உடனே தடுத்து வைக்கப்பட்டார். பின்­னர், ஏட்­டோஸ் துணை போலிஸ் அதி­காரி ஒரு­வர் அவரை போலிஸ் கென்­டான்­மண்ட் வளா­கத்­துக்கு அழைத்­துச் சென்­ற­போது, கோபி­நாத் அவர் மீது தகாத சொற்­க­ளைப் பயன்­ப­டுத்தியதுடன், அவர் மீது எச்­சில் துப்­பி­னார்.

கோபி­நாத்­தின் வேதனை ­த­ரும் நடத்­தை­யைக் கருத்­தில்கொண்டு குறைந்­தது அவருக்கு 23 வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கு­மாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்­டுக்­கொண்­டார்.

வேண்­டு­மென்றே தீங்கு விளை­வித்­த­துக்குக் கோபி­நாத்­துக்கு மூன்­றாண்­டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் $5,000 வரை அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்.

அரசு ஊழி­ய­ரைத் தாக்­கி­னால் நான்­காண்டு சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!