தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத பயண ஏற்பாட்டின்கீழ் சிங்கப்பூருக்கு வர 2,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பயண ஏற்பாட்டின்கீழ் சிங்கப்பூருக்கு வர எட்டு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விண்ணப்பிக்கலாம்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்தோரில் 2,409 பயணிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களில் 724 பேர் குறுகிய
காலப் பயணிகள், 1,685 பேர் நீண்டகால குடிநுழைவு அட்டை வைத்திருப்பவர்கள்.
தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள இந்தப் பயணிகளில் பிரிட்டனி
லிருந்து ஆக அதிகமானோர் சிங்கப்பூருக்கு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 11.59 மணி நில
வரப்படி பிரிட்டனைச் சேர்ந்த 976 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பிரான்ஸைச் சேர்ந்த 537 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 440 பேர் ஆகியோரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வர விண்ணப்பம் செய்வது நேற்று முன்தினம் காலை 10 மணிக்குத் தொடங்கியது.
கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இம்மாதம் 19ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு சிங்கப்பூருக்கு வர விண்ணப்பம் செய்யலாம்.
இத்திட்டம் மூலம் சிங்கப்பூருக்கு வர குறுகியகாலப் பயணிகளும் நீண்டகால குடிநுழைவு அட்டை வைத்திருப்போரும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண அட்டையைப் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இத்திட்டத்தின்கீழ் பயணம் செய்யலாம். அவர்கள் பயண அட்டைக்கு விண்ணப்பம் செய்யத் தேவையில்லை.
சிங்கப்பூருக்கு வரும் 12 வயதும் அதற்கும் குறைவான சிறுவர்கள் பயண அட்டைக்கு விண்ணப்பம் செய்யத் தேவையில்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக வெளிநாட்டுப் பயணங்களை சிங்கப்பூர் தற்காலிகமாக நிறுத்தியது.
அதற்குப் பிறகு தற்போது எல்லைகளை மீண்டும் திறக்க முற்படும் சிங்கப்பூர், இந்தப் பயண ஏற்பாட்டின்கீழ் பயணிகளுக்கு பயண அட்டை வழங்கியுள்ளது.
பயண அட்டை பெறும் பயணிகள் இம்மாதம் 19ஆம் தேதிக்கும் அடுத்த மாதம் 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூருக்கு வரலாம்.
"பயண ஏற்பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம், இவ்வாண்டு இறுதியில் சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்
கிறோம்.
"பாதுகாப்புடன் இருக்கும்படி அனைத்து பயணிகளையும் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக, சிறு பிள்ளைகளுடன் பயணம் செய்
பவர்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்," என்று ஆணையத்தின் தலைமை
இயக்குநர் ஹான் கொக் ஜுவான் தெரிவித்தார்.

