புவியியல் துறைக்கான நோபெல் பரிசு என்று கருதப்படும் அனைத்துலக வாவ்ட்ரின் லுட் பரிசு, என்யுஎஸ் பேராசிரியர் பிரண்டா இயோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பெற்ற முதல் சிங்கப்பூரர் எனும் பெருமை
இவரைச் சேரும்.
புவியியல் துறையில் சிறந்து விளங்கி, சாதனை படைக்கும் நிபுணர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் வெளிநாட்டு ஊழியர்
களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்
சினைகளைச் சுட்டி, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குத் தற்காலிகக் குடியேற்றம் நிரந்தரத் தீர்வைத் தராது என்ற கருத்தை முன்வைத்தார். வெளிநாட்டு ஊழியர்களையும் தேசிய சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்துடன் இணைத்து அவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றார் அவர். இந்த மாற்றம் தேவை என்பதை உலகத்தை உலுக்கி வரும் கொவிட்-19 நெருக்கடிநிலை உணர வைத்துள்ளதாக பேராசிரியர் இயோ கூறினார்.
தமது பணி அங்கீகரிக்கப்பட்டு தாம் கௌரவிக்கப்பட்டது குறித்து பேராசிரியர் இயோ மகிழ்ச்சி தெரிவித்தார்.

