துரித செயல்பாட்டால் கொவிட்-19 குழுமம் உருவாவது தவிர்க்கப்பட்டது

ஜூரோங் வெஸ்ட்­டில் உள்ள என்­டி­யுசி ஹெல்த் தாதிமை இல்­லத்­தில் தங்­கிய இரு­வ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டதை அடுத்து, அதன் நிர்­வா­கம் உட­னடி நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­யது.

கொவிட்-19 குழு­மம் உரு­வா­

வ­தைத் தடுக்க, தேவை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை அது நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது.

"இல்­ல­வா­சி­கள் இரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்ட செய்தி வெளி­வந்­த­தும் அனை­வ­ரும்

கவ­லை­யில் ஆழ்ந்­தோம். எங்­கள் தாதிமை இல்­லத்தில் தங்­கு­ப­வர்­கள் அனை­வ­ரும் முதி­ய­வர்­கள். கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் அவர்­க­ளுக்­குக் கடு­மை­யான பாதிப்பு ஏற்­படும் அபா­யம் அதி­கம்.

"அது­மட்­டு­மல்­லாது, கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைத் தவிர்க்க நாங்­கள் கடு­மை­யா­கப் பாடு­பட்­டோம். தேவை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை செயல்­

ப­டுத்­தி­யும் பாதிப்பு ஏற்­பட்­டதை எண்ணி ஏமாற்­ற­ம­டைந்­தோம்," என்று ஜூரோங் வெஸ்ட்­டில் உள்ள என்­டி­யுசி ஹெல்த் தாதிமை இல்­லத்­தில் தாதிமை நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரி­யும் டியோ ஐ லியான் தெரி­வித்­தார்.

தங்­கள் தாதிமை இல்­லம் இன்­னொரு கொவிட்-19 குழு­ம­மாக மாறி­வி­டக்­கூ­டாது என்­ப­தில் 39 வயது திரு­வாட்டி டியோ­வும்

அவ­ரது குழு­னி­வ­ரும் முனைப்

­பு­டன் இருந்­த­னர்.

இல்­ல­வா­சி­கள் அனை­வ­ரைக்­கும் அவர்­கள் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­த­னர். தாதிமை இல்­லத்­தில் வெவ்­வேறு பிரி­வு­கள் அமைத்து அதில் இல்­ல­வா­சி­

க­ளைத் தங்கவைத்­த­னர்.

பதற்­றத்­து­டன் இருந்த மூத்­தோ­ருக்கு திரு­வாட்டி டியோ­வின் குழு­வி­னர் ஆறு­தல் கூறி­னர்.

இல்­ல­வா­சி­களை அவர்­க­ளது குடும்­பத்­தி­னர் நேரில் காண முடி­யாத நிலை ஏற்­பட்­டது. இத­னால் தாதிமை இல்­லத்­தில் தங்­கும் மூத்­தோ­ரின் குடும்­பத்­தி­ன­ரு­டன் தொடர்­பு­கொண்டு அவர்­க­ளது உடல்­நிலை குறித்து தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

ஜூரோங் வெஸ்ட்­டில் உள்ள என்­டி­யுசி ஹெல்த் தாதிமை இல்­லத்­தில் 180 ஊழி­யர்­களும் 250 இல்­ல­வா­சி­களும் இருக்­கின்­ற­னர்.

"ஊழி­யர்­களில் பெரும்­பா­லா­னோர் கூடு­தல் நேரம் பணி­

பு­ரிந்­த­னர். சிலர் நாளுக்கு 12 மணி நேரம் வேலை செய்­த­னர். சமூக இடை­வெளி விதி­மு­றைக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட்­டது. இல்­ல­வா­சி­க­ளைப் பார்த்­துக்­கொள்­ளும் அதே வேளை­யில் எங்­கள் உடல்­ந­லத்­தை­யும்

நாங்­கள் கண்­கா­ணித்­தோம்.

"இல்­ல­வாசி இரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டதை அடுத்து, மற்­ற­வர்­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தில் நாங்­கள் கவ­ன­மாக இருந்­தோம். இதற்­காக நாங்­கள் கடு­மை­யாக உழைக்க வேண்டி இருந்­தது. தாதிமை இல்­லத்­தில் உள்ள தாதி­யருக்கு இது சவால்­மிக்க சூழ்­நி­லை­யாக அமைந்­தது.

"குறிப்­பாக, நீண்­ட­நாட்­க­ளா­கத் தங்­கள் குடும்­பத்­தி­ன­ரைப் பார்க்­கா­மல் இருந்த வெளி­நாட்­டுத் தாதி­யர் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­ட­னர்," என்று திரு­வாட்டி டியோ கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!