பெயர் மாறும் ‘ரிவர் சஃபாரி’

மண்­டா­யில் தற்­போ­துள்ள மூன்று வன­வி­லங்­குப் பூங்­காக்­களில் ஒன்­றான ‘ரிவர் சஃபாரி’, ‘ரிவர் வொன்­டர்ஸ்’ எனப் பெயர் மாற்­றம் காண்­கிறது. இதர இரண்டு பூங்­காக்­களான ‘சிங்­கப்­பூர் சூ’ எனும் சிங்கப்பூர் விலங்­குத் தோட்டம், ‘நைட் சஃபாரி’ ஆகி­ய­வற்­றின் பெயர்­கள் மாற்­றப்­ப­ட­மாட்டா எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மண்­டாய் வன­வி­லங்­குக் காப்பகமாக நேற்று பெயர் மாற்­றம் கண்ட சிங்­கப்­பூர் வன­வி­லங்­குக் காப்­பகத்­தின் தலைமை நிர்­வா­கி­யான திரு மைக் பார்க்லே இவ்­வி­வ­ரங்­க­ளை வெளியிட்டார். குழு­மத்­தின் புதிய அடை­யா­ளத்தை அறி­விப்­ப­தற்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்ட செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அவர் பேசி­னார்.

மேலும், மண்­டாய் பகு­தி­யில் இரண்டு புதிய வன­வி­லங்­குப் பூங்­காக்­க­ளைத் திறக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. கொவிட்-19 சூழ­லால் அவற்­றைத் திறப்­பது ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. ஜூரோங்­கில் உள்ள பறவைப் பூங்கா மண்­டாய்க்கு இடம் மாற்­றப்­படும் என்று 2016ஆம் ஆண்டு அறி­விக்­கப்­பட்­டது. அப்­பூங்­காவை சென்ற ஆண்டு பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­வி­டத் திட்­ட­மி­டப்பட்டிருந்தது. ‘பர்ட் பேர­டைஸ்’ எனப் பெயர் சூட்­டப்­பட்­டுள்ள புதிய பறவைப் பூங்கா அடுத்த ஆண்டு திறக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

‘ரெய்ன்­ஃபா­ரஸ்ட் வைல்ட்’ என்றழைக்­கப்­படும் மற்­றொரு புதிய பூங்­காவை 2023ஆம் ஆண்­டில் திறக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. அது இப்­போது 2024ஆம் ஆண்டுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இப்­பூங்­கா­வின் வடி­வம், காட்டுப் பகு­தி­யைக் கருப்­பொருளாகக் கொண்­டி­ருக்­கும்.

இந்­தக் கால­கட்­டத்­தில் மேம்­பாட்­டுப் பணி­களை மேற்­கொள்­வது சவா­லா­னது எனத் திரு பார்க்லே குறிப்­பிட்­டார். கொவிட்-19 சூழலால் தற்­போ­தி­ருக்­கும் ஊழி­யர்­க­ளு­டன் பணி­களில் ஈடு­ப­டு­வது சவா­லாக இருப்­ப­து­டன் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த தனி­மைப்­ப­டுத்­தும் உத்­த­ரவு போன்ற விதி­மு­றை­களும் நடப்­பில் உள்­ள­தை திரு பார்க்லே சுட்­டி­னார். இத­னால் பொது­வாக ஊழி­யர்­கள், பொருட்­கள் பற்­றாக்­குறை இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்டார்.

புதிய பூங்­காக்­கள் அமைக்­கப்­பட்ட பிறகு மண்­டாய் பகுதியில் மொத்தம் ஐந்து பூங்காக்கள் இருக்கும். அப்பகுதி ‘மண்டாய் வைல்ட்லைஃப் ரிசவ்’ எனப்படும் மண்டாய் வனவிலங்குக் காப்பகம் என்று அழைக்கப்படும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!