ஆப்கானிஸ்தானில் எழுந்துள்ள மனிதாபிமான பிரச்சினையைக் கையாளும் அதேவேளையில் பாதுகாப்பு விவகாரங்களை உலகம் மறந்துவிடக்கூடாது எனப் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். பாதுகாப்புப் பிரச்சினையால்தான் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் உலகம் தலையிடவேண்டியிருந்ததை திரு லீ சுட்டினார்.
ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை, இந்த வட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகள் தங்களை வளர்த்துக்கொள்ள வகைசெய்யாமல் இருக்கவேண்டும் எனப் பிரதமர் வருத்தம் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானை மறுநிர்மாணம் செய்ய அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயல்படும் அரசாங்கம் அந்நாட்டிற்கு அமையவேண்டும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

