பொதுமக்களிடையே நம்பிக்கையை வளர்த்து, பாதுகாப்பான முறையில் தனிமைப்படுத்தவேண்டிய அவசியமின்றி விமானப் பயணங்களை இடம்பெறச் செய்து எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவேண்டும். அதற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம் எனப் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறியுள்ளார். மக்கள், இடங்கள், வாய்ப்புகள் ஆகிய மூன்று அம்சங்களையும் இணைப்பதே அரசாங்கங்க, தொழில்துறைத் தலைவர்களின் இலக்காக இருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அனைத்துலக விமானத் துறையை மீட்பது குறித்து மெய்நிகராக நடத்தப்பட்ட மாநாட்டில் திரு ஈஸ்வரன் பேசினார். கொவிட்-19 சூழல் தொடர்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் 46 போக்குவரத்து அமைச்சர்கள் பங்கேற்றனர்.

