துவாஸ் வெடிப்பு: பொதுமக்களிடம் பாதுகாப்பு ஆலோசனை

துவாஸ் தொழில்­து­றைப் பகு­தி­யில் நேர்ந்த விபத்­தைப்போல் இனி ஒன்று நிக­ழா­மல் தவிர்க்க பொது­மக்­கள் பரிந்­து­ரை­களை முன்­வைக்க­லாம். இச்­சம்­ப­வத்திற்கான விசாரணைக் குழு, பரிந்­து­ரை­களை எழுத்து வடி­வில் சமர்ப்­பிக்­கு­மாறு பொது­மக்­க­ளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இம்­மா­தம் ஏழாம் தேதி­யன்று தொடங்கிய பொது­மக்­கள் கலந்­து­கொண்ட இவ்­வி­பத்து தொடர்­பி­லான முதற்­கட்ட விசா­ரணை அமர்­வு­கள் நிறை­வடைந்­தன. அத­னைத் தொடர்ந்து பாது­காப்பு பரிந்­து­ரை­களை முன்­வைக்­கு­மாறு பொது­மக்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

விபத்து சம்­ப­ந்தப்­பட்ட இரு அம்­சங்­க­ளின் தொடர்­பில்­தான் பரிந்­து­ரை­கள் இருக்­க­வேண்­டும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

முதல் அம்­சம், பாது­காப்­பான முறை­யில் இயந்­தி­ரங்­க­ளைத் தரு­விப்­பது, அவை நன்கு செயல்­ப­டு­வதை உறு­தி­செய்­வது, அவற்றை மேம்­ப­டுத்­து­வது உள்­ளிட்­ட­வை தொடர்­பி­லா­னது. தீப்­பி­டிக்­கக்­கூ­டிய ரசா­ய­னத் தூள் போன்ற பொருட்­களைப் பாது­காப்­பாக விநி­யோ­கிப்­பது, கையாள்­வது உள்­ளிட்­ட­வற்­றின் தொடர்­பில் இரண்­டா­வது அம்­சம் அமை­யும். பிப்­ர­வரி 24ஆம் தேதி­யன்று நேர்ந்த விபத்­துக்­கும் களி­மண் போன்றிருக்கும் பொருளை உரு­வாக்­கப் பயன்­ப­டுத்­தப்­படும் ஓர் இயந்­தி­ரத்­திற்­கும் தொடர்­பி­ருந்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. வெடிப்பு நேர்ந்த பிறகு அந்த இயந்­தி­ரத்­தின் கீழ்ப் பகுதி சேத­ம­டைந்­த­தி­ருந்­தது தெரி­ய­வந்­தது.

பொது­மக்­கள் தங்­க­ளின் பரிந்­து­ரை­களை இம்­மா­தம் 31ஆம் தேதிக்­குள் சமர்ப்­பிக்­க­வேண்­டும். பரிந்­துரை செய்­வோர் தங்­க­ளின் பெயர், வேலை, முக­வரி, தொடர்பு எண் உள்­ளிட்ட விவ­ரங்­க­ளைக் குறிப்­பி­ட­வேண்­டும். மனி­த­வள அமைச்­சைச் சேர்ந்த ஆட்­ரீனா சுவா அல்­லது டெல்­விந்­தர் சிங் ஆகி­யோ­ருக்கு மின்­னஞ்­சல்­வழி பரிந்­து­ரை­களை அனுப்­ப­லாம்.விபத்தின் தொடர்பிலான இரண்டாம் கட்ட விசாரணை அடுத்த மாதம் 15ஆம் தேதியன்று தொடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!