வீவக பற்றாக்குறை $2.34பி; முந்தைய ஆண்டில் $2.66பி

வீவக பற்றாக்குறை $2.34பி; முந்தைய ஆண்டில் $2.66பி

2 mins read
b4df840b-445b-41c1-84b8-a05c9c2e58a6
-

கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் குறைவு; மேம்பாட்டுப் பணிகள் இறக்கம்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் பற்­றாக்­குறை மார்ச் 31ஆம் தேதி யுடன் முடி­வ­டைந்த ஓராண்டு காலத்­தில் $2.34 பில்­லி­ய­னாக குறைந்தது.

இது அதற்கு முந்­தைய நிதி ஆண்­டில் $2.66 பில்­லி­ய­னாக இருந்­தது. நிதி ஆண்டு முழு­வ­தும் கொள்­மு­தல்­கா­ரர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட வீடு­க­ளின் எண்­ணிக்கை முன்­பை­விட குறை­வாக இருந்­ததே இதற்­கான கார­ணம். கொவிட்-19 தொற்று கார­ண­மாக கட்­டு­மா­னப் பணி­கள் பாதிக்­கப்­பட்­ட­தால் இத்­த­கைய நிலை ஏற்­பட்­டது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் புதிய அடுக்­கு­மாடி வீடு­க­ளுக்கு அதிக மானி­யம் கொடுக்­கிறது.

ஆகை­யால் கட்டி முடிக்­கப்­படும் வீடு­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக இருக்­கு­மா­னால் செல­வி­டும் மானி­ய­மும் குறை­யும்.

பற்­றாக்­குறை குறைந்­த­தற்கு மேம்­பாட்­டுப் பணி­களில் குறைவு இருந்­த­தும் கார­ணம்.

வீவ­க­வின் வரு­டாந்­திர அறிக்கை இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­விக்­கிறது. அந்த அறிக்கை நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

குடும்­பங்­களுக்கு உதவி செய்­யும் வகை­யில் ஆண்டு முழு­வ­தும் அதிக மத்­திய சேம நிதி வீட்டு மானி­யம் கொடுக்­கப்­பட்­டது. வாட­கைத் தள்­ளு­படி அளிக்­கப்­பட்­டது. அட­மா­னக் கடன் நிலு­வைத்­தொகையை தாம­த­மா­கச் செலுத்­து­வ­தற்கு விதிக்­கப்­படும் கட்­ட­ணம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

வீவ­க­வுக்கு அதன் வீட­மைப்பு திட்­டங்­களில் $2.64 பில்­லி­யன் பற்­றாக்­குறை ஏற்­பட்­டது. இது இதர நட­வ­டிக்­கை­கள் மூலம் கிடைத்த $3.3 மில்­லி­யன் உப­ரி­யைக் கொண்டு சரி­செய்­யப்­பட்­டது.

மொத்­தம் 8,124 வீடு­கள் கட்டி முடிக்­கப்­பட்டு கொள்­மு­தல்­கா­ரர்­களி­டம் கொடுக்­கப்­பட்­டன. இந்த எண்­ணிக்கை அதற்கு முந்­தைய ஆண்­டில் 11,609 ஆக இருந்­தது.

இப்­போது இருக்­கும் வீடு­கள் மேம்­ப­டுத்­து­வ­தற்­கான பற்­றாக்­குறை $440 மில்­லி­ய­னில் இருந்து $242 மில்­லி­ய­னா­கக் குறைந்­தது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் தன்­னு­டைய பற்­றாக்­கு­றைய ஈடு­செய்ய ஒவ்­வொர் ஆண்­டும் நிதி அமைச்­சி­டம் இருந்து மானி­யம் பெறு­கிறது.

இந்த மானி­யம் மார்ச் 31ல் முடி­வடைந்த 12 மாத காலத்­தில் $2.34 பில்­லி­ய­னாக இருந்­தது. இது அதற்கு முந்­தைய ஆண்­டில் $2.69 பில்­லி­யன் ஆகும்.

வீவக 1960ல் தோற்­று­விக்­கப்­பட்­டது முதல் அதற்கு அர­சாங்­கம் இது­வரை மொத்­தம் $38.57 பில்­லி­யன் மானி­யம் வழங்கி இருக்­கிறது.

கொவிட்-19 கார­ண­மாக கட்­டு­மா­னப் பணி­கள் பாதிக்­கப்­பட்­ட­தால் பிடிஓ திட்ட வீடு­களை வாங்க மக்­கள் அதிக காலம் காத்­தி­ருக்க வேண்டி இருக்­கிறது.