மேலும் மரணம், தொற்று

மேலும் மரணம், தொற்று

1 mins read
8a4df97c-5df4-4b62-9cb8-3b42ff4c1347
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கார­ண­மாக மேலும் ஒன்­பது பேர் மர­ண­மடைந்­த­தால் மொத்த மரண எண்­ணிக்கை 192 ஆகக் கூடி இருக்­கிறது என்று சுகா­தார அமைச்சு புதன்­கி­ழமை இரவு தெரி­வித்­தது. அவர்­கள் 52க்கும் 98க்கும் இடைப்­பட்ட வய­துள்­ள­வர்­கள்.

ஆறு பேர் ஆட­வர்­கள். மூவர் பெண்­கள். ஆறு பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள்.

இரண்டு பேர் ஓர் ஊசி போட்­டுக்கொண்­ட­வர்­கள். ஒரு­வர் முழுமையாகத் தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்.

அவர்­களில் எட்டு பேருக்கு ஏற்­கெ­னவே பல உடல் நலப் பிரச்­சி­னை­கள் இருந்­தன. கொவிட்-19 கார­ண­மாக புதன்கிழமையுடன் தொடர்ந்து 24 நாட்­கள் மரணங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. அக்­டோ­பர் மாதத்­தில் இது­வரை 97 பேர் மரணமடைந்­து­விட்­ட­னர்.

இத­னி­டையே, புதன்­கி­ழமை புதி­தாக 3,190 பேருக்­குத் தொற்று ஏற்­பட்­ட­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது.

அவர்­களில் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் 2,686 பேர். 498 பேர் ெவளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­க­ளைச் சேர்ந்­தவர்­கள். ஆறு பேர் வெளிநாடு­களில் இருந்து வந்­த­வர்­கள்.

சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 553 பேர் 60க்கும் அதிக வய­துள்ள முதி­ய­வர்­கள்.

புதி­தாக கிருமி தொற்­றி­யோரை­யும் சேர்த்து தொற்­றுக்கு ஆளா­வர்­களின் மொத்த எண்­ணிக்கை 135,395 ஆகி இருக்­கிறது.