எஸ்ஐஏவின் A380 ஜம்போ விமானம் சேவைக்குத் திரும்புகிறது

எஸ்ஐஏவின் A380 ஜம்போ விமானம் சேவைக்குத் திரும்புகிறது

1 mins read
6f3601e5-dc71-413d-a132-40f97e0539cc
எஸ்ஐஏ ஏ380 ஏர்பஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு எஸ்கியூ 322 என்ற சென்று அங்கிருந்து எஸ்கியூ 317 என்ற சேவையில் திரும்பி வரும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­திற்­குச் சொந்­த­மான ஏ380 ரக விமா­னங்­கள் 18 மாதங்­க­ளுக்­கும் அதிக காலம் தரை­யி­றக்­கப்­பட்­டி­ருந்­தன. இவ்­வி­மா­னங்­கள் நவம்­பர் 18ஆம் தேதி­யி­லி­ருந்து மீண்­டும் சேவை­யைத் தொடங்­கும் என சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் தெரி­வித்தது.

இந்த ஜம்போ வகை விமா­னம் எஸ்­கியூ 322 என சிங்­கப்­பூரி லிருந்து லண்­ட­னுக்­கும் எஸ்­கியூ 317 என லண்­ட­னி­லி­ருந்து சிங்­கப்பூருக்­கும் வழி­நில்லா சேவை­களை வழங்­கும்.

எஸ்­கியூ 317 சேவை, தடுப்­பூசி போடப்­பட்ட பய­ணி­க­ளுக்­கான பயண ஏற்­பாட்­டுத் திட்­டத்­தின் கீழ் சிங்­கப்­பூ­ருக்கு தடுப்­பூசி போட்­டுக் கொண்ட பய­ணி­க­ளைச் சுமந்து வரும். பிரிட்டனில் இருந்து வரு வோர் அக்டோபர் 19 முதல் தனிமை யில் இருக்க வேண்டிய தேவை யில்லா பயண வசதியைப் பெறுவர்.

ஏ380 விமா­னத்தை லண்­டன் சேவை­யில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கு முன்­ன­தாக அதை குறுந்­தொ­லைவு சேவை­களில் எஸ்­ஐஏ ஈடு­ப­டுத்­தும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.