'கேர்ஷீல்டு லைஃப்' திட்டம்: 1979, அதற்கு முன் பிறந்த சிங்கப்பூர்வாசிகள் சேரலாம்

'கேர்ஷீல்டு லைஃப்' திட்டம்: 1979, அதற்கு முன் பிறந்த சிங்கப்பூர்வாசிகள் சேரலாம்

2 mins read
235c502f-c1aa-4f42-9a36-15c76f1f5906
-

தகுதி உள்ள, 1979ல் அல்­லது அதற்கு முன்­ன­தாக பிறந்த சிங்­கப்பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் நவம்­பர் 6ஆம் தேதி முதல் 'கேர்ஷீல்டு லைஃப்' திட்­டத்­தில் சேர­லாம்.

இந்­தத் திட்­டம், நீண்டகாலத்­திற்குப் பரா­ம­ரிப்பு கிடைக்க வகை செய்­யும் காப்­பு­று­தித் திட்­ட­மா­கும்.கடு­மை­யான உடற்­கு­றை­கள் ஏற்­படும்போது அவற்­றுக்­குச் சிகிச்சை ­பெற தேவைப்­படும் பணத்தை இதன் மூலம் ஈடு செய்­ய­லாம்.

எல்­டர்­ஷீல்டு 400 திட்­டத்­தின் சந்தாதாரர்­கள்-1970 முதல் 1979 வரை பிறந்­த­வர்­கள்- தானா­கவே கேர்­ஷீல்டு லைஃப் திட்­டத்­தில் சேர்த்­துக் கொள்­ளப்­படுவார்­கள்.

இதற்­காக அவர்­கள் எதை­யும் செய்­ய­வேண்­டி­ய­தில்லை என்று சுகா­தார அமைச்சு நேற்று செய்தி அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

மற்ற அனை­வ­ரும் careshieldlife.gov.sg என்ற கேர்­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தித் திட்ட இணை­யத் தளம் மூலம் சேர வேண்­டும். இந்­தக் காப்­பு­று­தித் திட்­டம், எல்­டர்­ஷீல்டு திட்­டத்­தை­விட சிறந்த நீண்டகால பண உத­வியை வழங்­கு­கிறது.

கேர்­ஷீல்டு லைஃப் திட்­டம் 1980ல் அல்­லது அதற்­குப் பிறகு பிறந்த சிங்­கப்பூரர்­கள் அனை­வ­ருக்­கும் கட்­டா­ய­ம­னது. இந்­தப் பிரி­வினர் 2020 அக்­டோ­பர் 1ஆம் தேதி முதல் அல்­லது 30 வய­தா­கும்போது தானா­கவே திட்­டத்­தில் சேர்த்­துக்கொள்ளப்­ப­டு­வார்­கள்.

இப்­போது 740,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் இத்திட்­டத்­தில் சேரும் நிலை­யில் இருக்­கி­றார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் 65 வய­துள்ள குடி­மக்­களில் இரண்டு பேரில் ஒரு­வருக்கு ஆயு­ளில் கடு­மை­யான உடற்குறை ஏற்­படும் வாய்ப்பு இருப்­ப­தாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கேர்­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தித் திட்­டத்தை அம­லாக்­க­லாம் என்று எல்­டர்­ஷீல்டு மறு­ப­ரி­சீ­ல­னைக் குழு பரிந்­து­ரைத்­ததை அர­சாங்­கம் ஏற்­றுக்­கொண்டதற்கு இதுவே கார­ணம்.

கடந்த 1979 அல்­லது அதற்கு முன்­ன­தாக பிறந்த சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் அனை­வரும், கடு­மை­யான உடற்­கு­றைக்கு ஆளா­காத பட்­சத்­தில், இந்­தத் திட்­டத்­தில் சேர்ந்­து­கொள்­ள­லாம் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இப்­போ­தைய எல்­டர்­ஷீல்டு சந்தா ­தா­ரர்­கள் எல்­டர்­ஷீல்டு திட்­டத்­தில் இருந்து கேர்­ஷீல்டு லைஃப் திட்­டத்­துக்கு மாறிக்­கொள்ள விரும்­ப­வில்லை என்­றால் அவர்­க­ளுக்கு எல்­டர்­ஷீல்டு காப்­பு­றுதி திட்­டப் பாது­காப்பு தொடர்ந்து கிடைக்­கும்.

கேர்­ஷீல்டு லைஃப் திட்­டத்­தில் சேர ஊக்­க­மூட்­டும் விதத்­தில் அர­சாங்­கம் $2,500 வரைப்­பட்ட ஊக்கு­விப்பை வழங்­கு­கிறது. 1979ல் அல்­லது அதற்கு முன்­ன­தாக பிறந்­திருக்­கும் குடி­மக்­கள் அனை­வ­ரும் 2023 டிசம்­பர் 31க்கு முன்பு இந்­தத் திட்­டத்­தில் சேர்ந்­தால் இந்த ஊக்­கு­விப்பு கிடைக்­கும்.

அதோடு, மெர்­டேக்கா, முன்­னோடித் தலை­மு­றை­க­ளைச் சேர்ந்த குடி­மக்­கள் அந்­தத் தேதிக்­குள் இந்­தத் திட்­டத்­தில் சேர்ந்­தால் கூடு­தலாக $1,500 ஊக்­கு­விப்பை பெற­லாம். அர­சாங்­கம் நவம்­பர் 1ஆம் தேதி­யி­லி­ருந்து எல்­டர்­ஷீல்டு காப்­பு­றுதித் திட்ட நிர்­வா­கத்தை தனி­யா­ரி­டம் இருந்து தன்­வ­சம் எடுத்­துக்­கொள்­கிறது.