உடற்குறையாளர்கள் 6 பேருக்கு கல்வி உபகாரச் சம்பளம்

ஆசி­ய பசி­ஃபிக் பீரி­வ­ரிஸ் அற­நிறு­வ­னம், உடற்­குறை உள்­ள­வர்­களுக்­கான கல்வி உப­கா­ரச் சம்பளத்தை ஆறு பேருக்கு வழங்கி யது. கடந்த 2004 முதல் இது­வ­ரை­ 52 பேருக்கு இந்த அற­நி­று­வ­னம் $2 மில்­லி­ய­னுக்­கும் அதிக தொகையை உப­கா­ரச் சம்­ப­ள­மாகக் கொடுத்து இருக்­கிறது.

இந்த உதவி பெற்­ற­வர்­களில் இந்த ஆண்­டின் 2020 தோக்­கியோ உடற்­கு­றை­யா­ளர்­க­ளுக்­கான ஒலிம்­பிக் போட்­டி­களில் கலந்­து­கொண்ட குமாரி யிப் பின் ஸியு, திரு டோ வெய் சூங் ஆகிய இரு­வ­ரும் அடங்­கு­வர்.

இந்த அற­நி­று­வ­னத்­தின் கல்வி உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்று சாதித்­த­வர்­களில் திரு நீரத் சிங் ராஜ்­பால் ஒரு­வர். இவ­ருக்கு காது­கே­ளாத பிரச்­சினை உண்டு. தன்னைப் போல பாதிக்­கப்­பட்டு உள்ள மாண­வர்­களுக்கு உதவ வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் 16 வய­தில் வியட்­னா­மில் ஓர் அமைப்பு ஒன்றை இவர் ஏற்­ப­டுத்­தி­னார்.

சிங்­கப்­பூ­ர­ரான இவர், வியட்­னா­மில் வளர்ந்­த­வர். நண்­பர்­கள் சில­ரு­டன் சேர்ந்து ஏறத்­தாழ $7,000 திரட்டி காது­கே­ளாத ஏழை மாண­வர்­க­ளுக்கு எம்பி4 சாத­னம், ஆங்­கில ஒலிப்­புத்­த­கங்­கள். காதொ­லிச் சாத­னங்­கள் போன்­ற­வற்றை வழங்­கி­னார்.

வியட்­னா­மில் இவர் ஏற்­ப­டுத்­திய 'ஹிய­ரிங் வியட்­னாம்' என்ற ஓர் அமைப்பு, ஹோ சீ மின் சிட்டி­யில் காது­கே­ளா­தோ­ருக்­கான மூன்று பள்­ளிக்­கூ­டங்­க­ளுக்கு உதவி இருக்­கிறது.

திரு நீரத், 21, இப்­போது சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பொரு­ளி­யல் படிக்­கி­றார்.

கல்வி உப­கா­ரச் சம்­ப­ளம் வழங்­கும் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட கல்வி துணை அமைச்­சர் சுன் ஷுவெலிங், சிறப்பு உதவி தேவைப்­படும் மாண­வர்­களில் மேலும் பலரை உள்­ள­டக்­கும் வகை­யில் கல்­வியை விரி­வு­ப­டுத்த கடந்த பல ஆண்­டு­க­ளாக கல்வி அமைச்சு அதிக முயற்­சி­களை மேற்­கொண்டுள்ளது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!