தென்கிழக்காசியாவின் முதல் கடல்பயண பாவனை இயந்திரம்

தென்கிழக்காசியாவின் முதல் கடல்பயண பாவனை இயந்திரம்

2 mins read
054d27cc-f410-459b-b77b-75e9fa4790c8
பாவனைப் பயிற்சி இயந்திரம் பற்றி போக்குவரத்து மூத்தத் துணை அமைச்சர் சீ ஹொங் டாட்டிடம் சிங்கப்பூர் கடல்துறைக் கழகத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ்எஸ் விர்டி நேற்று விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் பல­து­றைத்­தொ­ழில் கல்­லூ­ரி­யில் கப்­பல் மாலு­மி­க­ளுக்­குப் பயிற்சி வழங்­கு­வ­தற்கு $1.2 மில்­லி­யன் மதிப்­பில் கப்­பல்­ப­ய­ணப் பாவனைப் பயிற்சி இயந்­தி­ரம் அறிமுகம் செய்யப்­பட்­டுள்­ளது.

தென்கிழக்­கா­சி­யா­வில் முதல் முறை­யாக இத்த­கைய இயந்­தி­ரம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

மேம்­பட்ட கப்­பல் பயண ஆய்வு பாவனை இயந்­தி­ரம் (ஏஎன்­ஆர்­எஸ்) என்­பது அதன் பெய­ரா­கும். அதில் கப்­பலை வழி­ந­டத்­தும் முழு­மை­யான கட்­டுப்­பாட்­டுத் தள­மும் உண்­மை­நி­லை போன்ற பாவ­னை­களை உரு­வாக்­கும் போக்­கு­வ­ரத்­துச் சேவை­மு­றை­யும்­ அ­டங்­கி­யுள்­ளன. கடற்­துறை மாண­வர்­கள் கட­லுக்­குச் செல்­லா­மல் கப்­ப­லைச் செலுத்த பயிற்சி பெற­வும் மதிப்­பீடு செய்­யப்­ப­ட­வும் இயந்­தி­ரம் உத­வும்.

இந்த இயந்­தி­ரத்­தில் பாவனை பயிற்­சி­மு­றை­யு­டன் செயற்கை நுண்­ண­றி­வும் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

பயன்­ப­டுத்­து­வோ­ரின் கண் அசை­வு­க­ளைக் கண்­கா­ணிக்­கும் கண்­ணா­டி­கள், மூளை­யின் மின் இயக்­கத்­தைப் பதிவு செய்­யும் தலை­யில் அணி­யும் பட்­டை­கள் போன்ற உணர்­க­ரு­வி­களில் பதி­யப்­படும் நுண்­ணிய தக­வல்­களை இயந்­தி­ரம் கண்­ட­றிந்­து­கொள்­கிறது.

சிங்­கப்­பூர் கடற்­து­றைக் கழ­க­மும் 'கொங்ஸ்­பர்க் டிஜிட்­டல்' எனும் மென்­பொ­ருள் நிறு­வ­ன­மும் இணைந்து ஏஎன்­ஆர்­எஸ் இயந்­தி­ரத்தை உரு­வாக்­கி­யுள்­ளன.

மனி­தத் தவ­ற்றால் ஏற்­படும் கடல் விபத்­து­களை இந்த இயந்­தி­ரம் குறைக்­கும் என்று நம்­பு­வ­தாக அவை கூறின.

ஏஎன்­ஆர்­எஸ் பாவனை இயந்­தி­ரம் மனி­தப் பயிற்­று­விப்­பா­ளர்­களுக்கு மாற்­றாக இருக்­காது என்­றும் அது அவர்­கள் வழங்­கும் பயிற்­சிக்­குத் துணை­யாக இருக்­கும் என்­றும் போக்­கு­வ­ரத்­து மூத்தத் துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் தெரி­வித்­தார்.

இயந்­தி­ரம் அறி­மு­கம் செய்­யப்­பட்ட 11வது சிங்­கப்­பூர் கடற்­து­றைக் கழ­கக் கருத்­த­ரங்­கில் திரு சீ நேற்று உரை­யாற்­றி­னார்.

சிங்­கப்­பூர் கடற்­து­றைக் கழ­கத்­துக்கு $80 மில்­லி­யன் உத­வித்­ தொகை­யை­யும் அவர் அறி­வித்­தார்.

அடுத்த ஐந்தாண்­டு­களில் திற­னா­ளர்­களை ஈர்க்­க­வும் புதிய அறிவு ­சார் தொழில்­நுட்­பங்­களில் முத­லீடு செய்­ய­வும் கழ­கம் அந்தத் தொகை­யைப் பயன்­ப­டுத்­தும்.