‘ஆசியானில் பேரிடர் நிர்வாகம் முக்கியம்’

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைச் சமா­ளித்து வரும் வேளை­யி­லும் பேரி­டர் நிர்­வா­கப் பணி­களில் ஆசியான் நாடுகள் தொடர்ந்து கவ­னம் செலுத்­து­வது முக்­கி­யம் என்று உள்­துறை, சட்ட அமைச்­சர் திரு கா. சண்முகம் கூறி­யுள்­ளார்.

பேரி­டர் குறித்த ஒன்­ப­தா­வது ஆசி­யான் அமைச்­சர்­நி­லைக் கூட்­டத்­தில் நேற்று உரை­யாற்­றி­ய­போது திரு சண்­மு­கம் இதைத் தெரி­வித்­தார்.

பேரி­டர் நிர்­வா­கம், அபா­யத்­தைக் குறைத்­தல் ஆகி­யவை தொடர்­பாக புதிய, மேம்­பட்ட ஆற்­றல்­கள் தேவை என்று கூறிய அமைச்­சர், உல­கம் எங்­கும் பரு­வ­நிலை மாற்­றம் தொடர்­பான நிறைய பேரி­டர்­கள் நிகழ்ந்து வரு­வ­தைச் சுட்­டி­னார்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த 389 பேரி­டர்­களில் பெரும்­பான்­மை­ யானவை பரு­வ­நிலை மாற்­றம் தொடர்பானவை என்­றார் திரு சண்­மு­கம்.

அவை சுமார் 100 மில்­லி­யன் உல­க­மக்­க­ளைப் பாதித்­த­து­டன் 170 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ருக்­கும் (S$229 பில்­லி­யன்) அதி­க­மான இழப்பை ஏற்­ப­டுத்­தின.

பேரி­டர் நிர்­வா­கத்தை மேம்படுத்­தும் முயற்­சி­கள் நடந்­து­வ­ரு­வ­தா­கக் கூறிய அவர், மனி­தா­பி­மான உத­விக்­கான ஆசி­யான் ஒருங்­கி­ணைப்பு நிலை­ய­மும் தெமா­செக் அற­நி­று­வ­ன­மும் கடந்த மே மாதம் கையெ­ழுத்­திட்ட நோக்­கக் குறிப்பை அதற்­குச் சான்­றா­கச் சுட்­டி­னார்.

அந்­தப் பரந்­து­பட்ட ஒத்­து­ழைப்­பில் பேரி­டர் நிர்­வா­கத்­தில் புத்­தாக்­க­மும் புதிய தொழில்­நுட்­பங்­க­ளின் உரு­வாக்­க­மும் அடங்­கும் என்று அமைச்­சர் விவ­ரித்­தார்.

ஒவ்­வோர் ஆண்­டும் நடை பெறும் பேரி­டர் குறித்த ஆசி­யான் அமைச்­சர்­நி­லைக் கூட்­டம், பேரி­டர் நிர்­வா­கம் குறித்த ஆசி­யான் செயற்­குழு ஆகி­ய­வற்­றின் தலை­மையை சிங்­கப்­பூர் இவ்வாண்டு ஏற்றுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!