பல்கலைக்கழக மாணவர்கள், புதிய பட்டதாரிகள்: வேலை பற்றிய எண்ணம் 45 விழுக்காட்டினரிடம் மாறியது

பல்கலைக்கழக மாணவர்கள், புதிய பட்டதாரிகள்: வேலை பற்றிய எண்ணம் 45 விழுக்காட்டினரிடம் மாறியது

1 mins read
55d72af0-a4ca-4c8f-846f-6fca1ee662a7
-

ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள், புதி­தா­கப் பட்­டம் பெற்­ற­வர்­கள் ஆகி­யோ­ரில் சுமார் 46 விழுக்­காட்­டி­னர், பெருந்­தொற்­றுச் சூழ­லில் தங்­கள் வேலைப் பாதை­களை மறு­ஆய்வு செய்­துள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர்.

வேலை வாய்ப்பு, விருப்­பம், எதிர்­பார்ப்பு ஆகி­யவை பற்­றிய எண்­ணங்­களைக் கிரு­மிப் பர­வல் மாற்றி ­யுள்­ள­தாக அவர்­கள் கூறி­னர்.

சிஎ­ஃப்ஏ கழ­கம், சிங்­கப்­பூர், ஆஸ்­தி­ரே­லியா, இந்­தியா, ஹாங்­காங், ஜப்­பான் உள்­ளிட்ட 15 சந்­தை­க­ளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளி­டம் நடத்­திய ஆய்­வில் அது தெரிய வந்­தது.

ஆய்­வில் கலந்­து­கொண்­ட­வர்­களில் 41 விழுக்­காட்­டி­னர் கிரு­மிப் பர­வ­லுக்­குப் பின்­னர் தாங்­கள் சேர விரும்­பும் துறையை மாற்றுவது பற்றி யோசித்ததாகக் கூறி­னர்.

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்­த­வர்­களில் 22% பேர் போதிய வேலை­கள் இல்­லா­மல் வேறு துறைக்கு மாற வேண்­டிய சாத்தியம்தான், தங்­க­ளுக்கு இருக்­கும் ஆகப் பெரிய அச்­சம் என்­று தெரிவித்தனர்.

ஆய்­வில் கலந்­து­கொண்ட மொத்த பேரில் சுமார் 83 விழுக்­காட்­டி­னர் தற்­போ­தைய வேலைச் சூழ­லில் திறன்­களை மேம்­ப­டுத்தி, நிபு­ணத்­து­வத் சான்­றி­தழ் அல்­லது முது­நிலை சான்­றி­தழ் பெறு­வது அவ­சி­யம் என்­ற­னர்.

கூடு­த­லா­னோர் மேற்­ப­டிப்­பைத் தொடர முடிவு செய்­வ­தால், பெருந்­தொற்­றுச் சூழல் கார­ண­மாக அதி­கத் திறன்­பெற்ற ஊழி­யர் அணி உரு­வா­க­லாம் என்று சிஎ­ஃப்ஏ கழ­கத்­தின் ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­துக்­கான நிர்­வாக இயக்­கு­நர் நிக் போலார்ட் கூறி­னார்.