தொழில்நுட்ப உதவியாளர்களாக நடித்து சேமிப்பைக் களவாட முயன்ற மோசடிக்காரர்கள்

1 mins read
0a24c03d-3f80-4ef4-b092-b8ca726e600c
-

உள்­ளூர் தொலைத்­தொ­டர்பு நிறு­ வ­னங்­கள் அல்­லது அர­சாங்க அமைப்பு­க­ளைச் சேர்ந்த தொழில்­நுட்ப உத­வி­யா­ளர்­கள் போல ஆள்­மா­றாட்­டம் செய்­யும் மோச­டிக்­கா­ரர்­கள் தேடப்­பட்டு வரு­வ­தாக போலி­சார் தெரி­வித்­த­துள்­ள­னர்.

கடந்த மாதம் இந்த மோச­டிக்­கா­ரர்­க­ளி­டம் இரண்டு பேர் தங்­க­ளது வாழ்­நாள் சேமிப்பை இழக்­கும் ஆபத்­தில் இருந்­த­னர்.

அந்த இரு­வ­ரின் வங்­கிக் கணக்­கி­லி­ருந்து 300,000 வெள்­ளிக்­கும் அதி­க­மான பணத்தை மாற்ற அந்த மோச­டிக்­கா­ரர்­கள் முயன்­ற­னர்.

நல்ல வேளை­யாக ஓசி­பிசி வாங்­கி­யைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் அந்த ­வங்­கி­யின் மோசடி கண்­ காணிப்புக் கட்­ட­மைப்­பும் இந்த சந்­தே­கத்­திற்­கு­ரிய பணமாற்ற வேண்­டு­கோள்­க­ளைக் கண்­டு­பிடித்­த­னர். ஏமாற்ற முயன்ற அந்த இரு­வரை உடனே தொடர்­பு­கொண்ட வங்­கி­ அ­தி­கா­ரி­கள் உண்­மையை அறிந்து கொண்­ட­னர்.

மோச­டிக்­கா­ரர்­கள், தங்­களை அர­சாங்க அமைப்­பு­கள் அல்­லது தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளாக அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்டு ஏமாற்ற முயற்சி செய்­வார்­கள்.

தங்­க­ளி­டம் பேசு­வோ­ரின் கம்­பி­யில்லா இணை­யச் சேவை சட்­ட­வி­ரோ­த­மாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கக் கூறு­வர் அல்­லது இவர்­க­ளது கணினி அல்­லது திறன்­பே­சி­கள் இணையக் கிருமிகளால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கச் சொல்­வர்.

டீம்­வி­யு­வர், எனி­டெஸ்க் போன்ற மென்­பொ­ருட்­க­ளின் வழி­யாக ஏமாற்றுக்­கா­ரர்­கள், தொலை­வி­லி­ருந்து பாதிக்­கப்­பட்­டோ­ரின் கணி­னி­களைப் பயன்­ப­டுத்தி இணைய வங்கி விவ­ரங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­வர்.

நேர்­மை­யான சேவை­களை வழங்­கும் நிறு­வ­னங்­கள் இப்­படி தொலை­பே­சி­யின் மூல­மாக வங்கி விவ­ரங்­க­ளைப் பெற­மாட்­டார்­கள் என்­பதை நினை­வு­ப­டுத்த விரும்­பு ­வ­தா­க போலி­சார் கூறி­னர்.