'போன்சி' சாயலில் வேலை தொடர்பான மோசடிகள்

'போன்சி' சாயலில் வேலை தொடர்பான மோசடிகள்

2 mins read
f0271511-5329-4efb-bebc-93344cdcb6ae
-

போலி நிறு­வ­னங்­க­ளு­ட­னான 'போன்சி' போன்ற வேலை தொடர்­பான மோச­டி­கள் தொடர்­பில் 18 வய­துக்­கும் 35 வய­துக்­கும் இடைப்­பட்ட பதி­னாறு ஆட­வர்­களும் மூன்று பெண்­களும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

சிங்­கப்­பூர் போலிஸ் படை திங்­கட்­கி­ழ­மை­யன்று தீவு முழு­வ­தும் மோசடிக்கு எதி­ரான அம­லாக்க நட­வடிக்­கையை மேற்­கொண்­டது. வாட்ஸ்­அப் குறுஞ்­செய்­தி­கள், ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கி­ராம் பதி­வு­கள், இணைய விளம்­ப­ரங்­கள் ஆகி­ய­வற்­றில் அதி­கச் சம்­ப­ளம் வழங்­கும் பகு­தி­நேர வேலை­க­ளைப் பற்றி குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தைப் பற்றி போலி­சா­ரி­டம் புகார் அளிக்­கப்­பட்­டதை அடுத்து இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

விளம்­ப­ரத்­தால் ஈர்க்­கப்­பட்டு வேலை நாடி வரு­ப­வர்­க­ளுக்கு போலி இணைய வேலை­கள் வழங்­கப்­படும். சமூக ஊட­கக் கணக்­கு­களை/பக்­கங்­க­ளைப் பின்­தொ­டர்­வது, பதி­வு­க­ளுக்கு 'லைக்' போடு­வது உள்­ளிட்ட எளிய வேலை­கள் இவற்­றில் அடங்­கும் என்று போலி­சார் குறிப்­பிட்­ட­னர்.

தர­குத் தொகை ஈட்ட வேண்டு­மா­யின், குறிப்­பிட்ட சில இணை­யத்­த­ளங்­கள் மற்­றும் கைபேசிச் செயலி­களில் இல­வச உறுப்­பி­னர் கணக்­கு­க­ளைப் பதிந்­து­கொள்­ளு­மாறு கூறப்­படும்.

கணக்­கு­க­ளைத் திறந்த பிறகு $10 முதல் சில ஆயி­ரம் வெள்ளி வரை­யி­லான கட்­ட­ணம் கொண்ட வெவ்­வேறு உறுப்­பி­னர் திட்­டங்­கள் பரிந்­து­ரைக்­கப்­படும். வேலைக்­குத் தகுந்த தர­குத் தொகை தரப்­படும் என்­றும் கூறப்­பட்­டது. கட்­ட­ணத்தை இணைய நாண­யம் அல்­லது வங்­கிப் பரி­மாற்­றம் வழி அறி­மு­க­மில்லா நபர்­க­ளுக்­குச் செலுத்­திய பின்­னர், வேலை­யைச் செய்து தர­குத் தொகை­யைப் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

உறுப்­பி­னர்த் திட்­டத்­தில் இணைந்த ஆரம்­பக் கட்­டத்­தில் தர­குத் தொகை கிடைத்­து­வி­டு­வ­தால் இது சட்­டப்­ப­டி­யான ஒரு வேலை என்று சிலர் நம்­பி­னர். இருப்­பி­னும், தர­குப் பணம் பின்­னா­ளில் கிடைக்­கா­த­போது, தாங்­கள் ஏமாற்­றப்­பட்­டதை அறிந்­து­கொண்­ட­னர். போலிஸ் விசா­ரணை தொடர்­கிறது.