அடுத்த இரு வாரங்களுக்கு இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்

அடுத்த இரு வாரங்களுக்கு இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்

1 mins read
6d0fecc8-590a-49cb-a454-5d4f1f50e85b
கருமேகத்துடன் காணப்படும் பீஷான் வட்டாரம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அடுத்த இரு வாரங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னுரைக்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) தெரிவித்தது.

பெரும்பாலான நாள்களில் முற்பகலிலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக அது தெரிவித்தது.

பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும்.

இந்த மாத முற்பாதியில் தீவின் சில பகுதிகளில் முற்பகலிலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை சிறிது நேரம் பெய்தது. எனினும், சராசரி அளவைவிட குறைவான அளவே மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்