பொய்த்தகவல் கொடுத்ததாக நிரந்தரவாசி மீது குற்றச்சாட்டு

வீட்­டி­லேயே தனி­மை­ உத்தரவை நிறைவேற்றலாம் என்பதற்காக சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசி ஒரு­வர் சாங்கி விமான நிலை­யத்­தில் பொய்­த் தகவல்களைத் தாக்­கல் செய்­த­தாக நேற்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

தைவா­னைச் சேர்ந்த லு யி யின், 48, என்ற அந்த ஆட­வர் மீது, தொற்­றுநோய்ச் சட்­டத்­தின் கீழ் நேற்று மாவட்ட நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

அவர், தன்­னைப் போன்று பய­ணங்­களை மேற்­கொண்­டுள்ள, தனிமை உத்­த­ரவை நிறை­வேற்றி வரு­கின்ற குடும்­பத்­தி­ன­ரு­டன் வீட்­டில் தனி­யாக இருக்­கப்­போ­வ­தாக அல்­லது தனி­யாக வீட்­டில் தனி­மை­யில் இருக்­கப்­போ­வ­தாக படி­வத்­தில் குறிப்­பிட்­ட­தாகத் தெரிவிக்­கப்­பட்­டது.

அதை­ய­டுத்து, ஜூலை 14 முதல் 28 வரை வீட்­டில் தனி­மை­யில் இருக்­கும்­படி அவ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அடுத்த நாளன்று அம­லாக்க அதி­கா­ரி­கள் அவர் தங்கி இருந்த வீட்­டுக்­குச் சென்று பரி­சோ­தித்­த­போது, வீட்­டில் இருந்த இரண்டு பேர் அந்த ஆட­வ­ரைப்போல பயணம் மேற்­கொண்­டி­ருக்­க­வில்லை என்­பது தெரிந்­தது.

ஆட­வர் லு பய­ணம் மேற்­கொண்ட நாடு, அவ­ரின் வீட்டு முக­வரி, குடும்ப உறுப்­பி­னர்­கள் போன்ற விவ­ரங்­களை நீதி­மன்­றப் பத்­தி­ரங்­கள் தெரி­விக்­க­வில்லை. லுவுக்கு $5,000 பிணை அனு­மதிக்­கப்­பட்டு உள்­ளது.

அவ­ரின் வழக்கு அடுத்த ஆண்டு ஜன­வரி 7ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!