தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், கொவிட்-19 தொற்றின் சமூக விளைவுகளை நாடகம், நகைச்சுவை மூலமாக காட்டும் மூன்று குறும்படங்களை உருவாக்கியுள்ளனர்.
அந்தப் படங்கள் வியாழக்கிழமை சிங்கப்பூர் டிஸ்கவரி நிலையத்தில் போட்டுக்காட்டப்பட்டன.
அவை ஜூரோங்கில் இருக்கும் சிங்கப்பூர் டிஸ்கவரி நிலைய அரங்குகளில் நேற்று தொடங்கி நாளை வரை இலவசமாகத் திரையிடப்படும்.
முன்பதிவுக்கு https://www.sdc.com.sg/shop என்ற இணையத்தளம் நாடலாம்.
சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டருக்கும் தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரியின் மின்னிலக்க திரைப்படம், தொலைக்காட்சித் துறை வடிவமைப்பு பட்டயப் படிப்புப் பள்ளிக்கும் இடையில் 2014ல் ஏற்பட்ட ஓர் இணக்கத்தின் ஒரு பகுதியாக இத்திரைப்படங்கள் உருவாயின.
இந்த இணக்கத்திட்டம் 'சிங்கப்பூர் கதை சொல்லும் குறும்படங்கள்' என்று குறிப்பிடப்படும்.

