சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ் பற்றுச்சீட்டுத் திட்டத்தில் முறைகேடு: பயண ஏற்பாட்டு நிறுவனம் நீக்கம்

2 mins read
7ca21058-2066-4ea6-83bb-cbc34c330861
-

சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ் பற்றுச்சீட்டுத் திட்டத்தில் இருந்து பயண முகவை நிறுவனம் ஒன்று தற்

காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

பற்றுச்சீட்டுகளைத் தவறாகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனத்தின் பயண முகவர் உரிமம் பறிக்கப்படலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

கான்டினென்டல் டிராவல் சிங்கப்பூர் என்னும் நிறுவனம், பொதுமக்களில் சிலரின் பற்றுச்சீட்டு

களுக்கு ரொக்கம் தரும் ஏற்பாடுகளைச் செய்தததாகக் கூறப்பட்டது.

இது தொடர்பாக கடந்த மாதம் மூன்று பேரை போலிசார் கைது செய்தனர்.

தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ் பற்றுச்சீட்டுத் திட்டத்திற்கான புதிய பதிவுகளை கான்டினென்டல் டிராவல் ஏற்கமுடியாது என்றும் ஏற்கெனவே முறையாகச் செய்யப்பட்ட பதிவுகள் பாதிக்கப்படாது என்றும் கழகம் நேற்று கூறியது.

பயண முகவர் உரிமம் பறிபோவதைத் தடுக்க நிறுவனம் மேல்

முறையீடு செய்வதற்காக 14 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உரிமம் இடைநீக்கம் செய்யப்படுவது தொடர்பான கடிதம் குறித்து இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பயண முன்பதிவுத் தளமான Klook தனது பட்டியலில் இருந்து கான்டினென்டல் டிராவல் நிறுவனத்தை நீக்கி உள்ளது.

தற்காலிக நீக்க நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த கான்டினென்டல் டிராவல் நிறுவனத்தின் உரிமையாளரும் இயக்குநருமான பேட்ரிக் கோங், நடந்த செயல்

களுக்காகத் தாம் வருந்துவதாகக் குறிப்பிட்டார்.

20 மாதங்களாக முடங்கிப் போயிருக்கும் வர்த்தகத்துக்குப் புத்துயிரூட்ட ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில் தமது நிறுவனம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

"பற்றுச்சீட்டுத் திட்டம் கைகொடுக்கும் என்று மகிழ்ந்திருந்தோம். ஆனால் எங்களது செயல்களே எங்களைப் பாதித்துவிட்டன," என்றார் அவர்.