தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$154,900 திருட காசோலையை திருத்திய ஆடவர்

1 mins read
3857484b-a459-4ef2-b9ad-abd4b88f1168
-

சிறையிலிருந்து வெளியான நான்கு மாதங்களில் மீண்டும் குற்றம் புரிந்தார் 44 வயது ஆடவர். தமது காதலியின் வங்கிக் கணக்கில் இருந்து $154,900 எடுக்க அவரது காசோலையைத் திருத்தியதாக ஃபிரான்சிஸ் லிம் சீ சியோங் என்னும் அந்த ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றத்திற்காக நேற்று அவருக்கு மூன்றாண்டு,

10 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு தமது தந்தையின் கடன்பற்று அட்டை விண்ணப்பத்தைத் திருத்தி $57,000 இழப்பு ஏற்படுத்திய குற்றத்திற்காக இவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.