மனிதவளச் சேவைகளில் உடற்குறை உள்ளோருக்குப் பயிற்சி அளிக்கவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் புதிய நடவடிக்கை ஒன்று தொடங்கப்பட உள்ளது.
வேலைக்கு ஆட்களை நியமிப்பதில் அனைவரையும் உள்ளடக்கிய போக்கை முதலாளிகள் வளர்க்க முடியும் என்பதற்கு இந்த நடவடிக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.
"அடுத்த ஆண்டின் முதலாம் காலாண்டுவாக்கில் தொடங்கப்பட உள்ள 'ஹெச் ஆர் பவர் பேங்க்' என்னும் இந்நடவடிக்கைக்கு 'எஸ்ஜி எனேபிள்' முகவை கைகொடுக்கும். மைக்ரோசாஃப்ட் சிங்கப்பூர், அலிபாபா கிளவுட் போன்ற பங்காளிகளுடன் இணைந்து 30 பயிற்சித் திட்டங்களையும் வேலைவாய்ப்புகளையும் அது வழங்கும்.
"'ஹெச் ஆர் பவர் பேங்க்' நடவடிக்கை ஹெச்சிஎஸ் எனப்படும் சிங்கப்பூர் மனித மூலதன அமைப்பின் முயற்சி," என்றார் அதிபர்.
நேற்று நடைபெற்ற மெய்நிகர் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், உடற்குறை உள்ளோருக்கு ஊக்கம் அளிக்கும் சமூகத்தின் தற்போதைய முயற்சிகளில் நிறு வனங்களின் முதலாளிகள் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
"அனைவரையும் உள்ளடக்கிய பணி நியமனம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நடந்தேறும். இந்
நிகழ்வில் பங்கேற்றுள்ளவர்களைப் போல இன்னும் பல நிறுவனங்களின் முதலாளிகளின் கூட்டு முயற்சி இதற்குத் தேவைப்படுகிறது," என்று தெரிவித்தார்
திருவாட்டி ஹலிமா.
அதிபரின் 'திறன்மிக்க வேலைவாய்ப்புப் பற்றுறுதி சவால்' நட
வடிக்கையில் தனியார் மற்றும் பொதுத் துறைகளைச் சேர்ந்த 148 அமைப்புகள் கையெழுத்திட்டு உள்ளதாக அவர் கூறினார். அனைவரையும் உள்ளடக்கிய பணி நியமினத்திற்கான கடப்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த நட
வடிக்கைத் தொடங்கப்பட்டது.
எஸ்ஜி எனேபிள் என்பது உடற்குறை உள்ளோரின் ஆற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு முகவை. 'ஹெச் ஆர் பவர் பேங்க்' நடவடிக்கையின் கீழ் மனிதவள நிர்வாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட உடற்குறை உள்ளோரை ஹெச்சிஎஸ் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கும் என்று ஹெச்சிஎஸ் அமைப்பின் நிர்வாகக்குழு தலைவர் ரிச்சர்ட் மேக்னஸ் தெரிவித்தார்.

